Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
வழுக்கைத் தலையா? கவலைப்படாதீங்க... அதுல நிறைய நன்மை இருக்கு...
தற்போது ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழுந்துவிடுகிறது. இப்படி வழுக்கை விழுவதால் இதுவரை மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்கள், சமீப காலமாக வருத்தப்படாமல் சந்தோஷப்படுகின்றனர். ஏனெனில் தற்போது வழுக்கைத் தலை மிகவும் ஃபேஷனாகிவிட்டது. அதுமட்டுமின்றி, வழுக்கைத் தலையுடன் இருப்பது இன்னும் சிறந்தது என்று பலர் நினைக்கின்றனர்.
மேலும் முக்கியமாக பெரும்பாலான பெண்களின் கண்களுக்கு வழுக்கைத் தலையுள்ள ஆண்கள் தான் மிகவும் செக்ஸியாக காணப்படுகிறார்கள். இதுப்போன்று இன்னும் நிறைய நன்மைகள் வழுக்கைத் தலையுடன் இருப்பதால் கிடைக்கிறது. இங்கு வழுக்கைத் தலையுடன் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நேரம் மிச்சமாகும்
உண்மையிலேயே தலையில் முடி இருந்தால், வெளியே செல்லும் போது அதனை கண்ணாடி முன் நின்று சரிசெய்ய நிறைய நேரம் தேவைப்படும். அதுவே தலையில் முடி இல்லாவிட்டால், கண்ணாடியை பார்க்கக்கூட தேவையில்லை.

முடி சம்பந்தமான பிரச்சனைகள் இருக்காது
தலையில் முடி இருந்தால் தான் முடி உதிர்தல், பொருகுத் தொல்லை, முடி துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதுவே முடி இல்லாவிட்டால், எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

பணம் மிச்சம்
முடியானது தலையில் இருந்தால், அதனை பராமரிக்க நிறைய பணத்தை செலவிட வேண்டியிருக்கும். ஆனால் அது இல்லாவிட்டால், நம் பாக்கெட்டில் பணம் நிறைய இருக்கும். இதனால் நாம் வேறு எவற்றிற்காவது பணத்தை செலவழிக்கலாம்.

வித்தியாசமான ஸ்டைல்
ஆம், வழுக்கை தலையுடன் இருந்தால், மீசை மற்றும் தாடியை பல ஸ்டைல்களில் வைத்துக் கொள்ளலாம். அப்படி வைப்பதால், பல பெண்களின் பார்வையை நம் மீது விழச் செய்யலாம்.

கவலையே தேவையில்லை
தலையில் முடி இருந்தால் தானே முடி உதிர்கிறது என்று கவலைப்படுவோம். மேலும் தற்போது நிறைய ஆண்கள் முடி உதிர்வதாலேயே மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அத்தகைய முடியே இல்லாவிட்டால், மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் அல்லவா!
இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications
