Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தலை முடிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய செயல்கள்!!!
இந்திய தட்ப வெப்பநிலை கூந்தலுக்கு பல பாதிப்பை கொண்டு வரும். பெண்களுக்கும் ஆண்களுக்கும் அழகு சேர்ப்பது கூந்தல் தான். அத்தகைய அழகைத் தரும் கூந்தலை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை அல்லவா? சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கூந்தல் மீது மாறாத அன்பு வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த கூந்தலை பராமரிக்க மட்டும் மறந்து விடுகின்றனர். அலுவலகத்திலும், வெளி இடங்களிலும் உள்ள தேவையில்லாத மாசுக்களால் கூந்தலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.
எனவே கூந்தல் வேண்டுமென்றால் அதற்கான பராமரிப்பு மிகவும் அவசியம். அதிலும் நல்ல தரமான ஷாம்பு பயன்படுத்தி, கண்டிஷனர் சேர்த்து, இயற்கை முறையில் கூந்தலை பாதுகாக்க வேண்டும். மேலும் முடி கொட்டுகின்றது என்று தெரிந்த உடனே மருத்துவரை அணுகி என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து, அதன் படி நடந்தால் கூந்தலை காக்க முடியும்.
அதுமட்டுமின்றி, கூந்தலுக்கு சில நேரங்களில் அழுத்தமானது பலவாறு வருகின்றன. இதனால் அவை வலுவிழந்து, அதிகப்படியாக உதிர ஆரம்பிக்கிறது. ஆகவே கூந்தலுக்கு ஏற்படும் அழுத்தங்களை தடுத்து நிறுத்தி, முறையாக பராமரித்து வர வேண்டும். இப்போது கூந்தலுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து கூந்தல் உதிர்வை ஏற்படுத்தும் சில செயல்கள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை திருத்தி, கூந்தலை சரியாக பராமரித்து வாருங்கள்.

சுற்றுச்சூழல் மாசு
சுற்றுச்சூழலில் உள்ள மாசுக்களானது கூந்தலின் அழகை கெடுக்கக்கூடும். அதிலும் வெளி இடங்களுக்கு செல்லும் போது, அங்குள்ள தூசுக்களால் கூந்தல் பொலிவிழந்து காணப்படும். சில பெண்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது, தலையில் ஸ்கார்ப் அணிந்து கொள்வர். ஆனால் அது வெயிலின் தாக்கத்திலிருந்து காக்குமே தவிர, அதனால் வியர்வை தலையில் அதிகம் ஏற்பட்டு, முடி கொட்டும் அபாயம் ஏற்படும்.

தட்ப வெப்பநிலை
கூந்தலை வலுவிழக்க செய்யும் அடுத்த விஷயம் தட்ப வெப்பநிலை. கால நிலை ஒரே சீராக இருப்பதில்லை. ஒன்று அதிக சூடாக இருக்கலாம், இல்லையெனில் அதிக குளிர்ச்சியாக இருக்கலாம். இது இரண்டும் மாறி மாறி வருவதால், கூந்தலுக்கு ஆபத்து ஏற்படுகின்றது.

அதிகமாக சீவுதல்
சரும நிபுணரான டாக்டர். நிப்பூன் ஜெயின், கூந்தலை அதிகமாக வாருவதன் மூலமும் முடி கொட்டும் வாய்ப்புள்ளது என்று கூறுகின்றார். ஒவ்வொரு முறை தலை வாரும் போதும், முடியில் தேவையில்லாத சிரமமானது ஏற்பட்டு வலுவை இழந்து, முடி கொட்டும் அபாயம் ஏற்படுகின்றது.

ஹேர் ஸ்டைல்
குதிரை வால் மற்றும் கொண்டை போன்ற ஹேர் ஸ்டைல்கள் முடியை பாதிக்கக்கூடும். ஏனெனில் இவ்வகையான ஸ்டைல்கள் முடியை இறுக்கமாக்குவதுடன் உடையவும் செய்கின்றது. ஆகவே கூந்தலை எப்பொழுதும் லூசாக விடவும். இதனால் அவை நன்றாக மூச்சுவிட்டு, நன்கு வளரும்.

ஈரமான கூந்தலை கட்டுதல்
ஈரமான கூந்தலை இறுக்கமாக முடித்தாலும் கூந்தல் உதிரும். ஈரமான கூந்தல் மிகவும் வலுவிழந்து காணப்படும். ஆகவே இதனை மேலும் இறுக்கி முடிந்தால், அவ்வளவு தான் கூந்தல் உங்களுக்கில்லை.

ஹேர் ட்ரையர்
ஹேர் ட்ரையரும் கூந்தலை பாதிக்கும். ஏனெனில் இவ்வகையான உபகரணங்கள் அதிக அளவு வெப்பத்தை கூந்தலில் ஏற்படுத்தி, கூந்தலை உதிர செய்யும். எனவே, இயற்கை முறையில் கூந்தலை உலர்த்தினாலே போதுமானது.

ஹேர் ஜெல்
முடியை அலங்கரிக்க பயன்படுத்தும் ஹேர் ஜெல் அல்லது க்ரீம் போன்றவற்றை முடியின் மீது தடவிய உடனே துடைத்து விட வேண்டும். ஏனெனில் இவற்றில் உள்ள கெமிக்கல், கூந்தலின் வலுவை போக்கி உதிர செய்யும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

ஹேர் பாண்ட்/ஊக்கு
வெகுநேரம் கூந்தலுக்கு சீரான காற்று இல்லாமல், இறுக்கமாக முடிந்து வைத்திருப்பது கூந்தலை உதிர செய்யும். அதிலும் கூந்தலுக்கு போடும் ஹேர் பாண்ட் அல்லது ஊக்கு போன்றவற்றை வெகுநேரம் கூந்தலில் வைத்திருக்காமல், முடிந்த வரை சீக்கிரமாக கழற்றி விட வேண்டும். இல்லையென்றால் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படும்.

தூக்கம்
பல பெண்கள் தூங்க செல்லும் முன், கொண்டை அல்லது இறுக்கமாக பிண்ணியோ வைக்கின்றனர். இதனால் கூந்தல் உதிர வாய்ப்புள்ளது. ஆகவே இரவு படுக்கும் போது கூந்தலை லேசாகவே கட்டி வைத்து தூங்குங்கள்.

நேரான முடி
முடியை நேராக்குவதற்கு பயன்படுத்தும் இயந்திரம், கெமிக்கல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை தற்காலிக அழகை கொடுக்குமே தவிர, நிரந்தர முடி உதிர்வை ஏற்படுத்தி, கூந்தலின் பொலிவை போக்கி விடும்.

கெமிக்கல் ஷாம்பு
கூந்தலுக்கு எப்போதும் மென்மையான ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்புவை பயன்படுத்தினால், கூந்தலை மறக்க வேண்டியது தான். ஆகவே எப்போதும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஷாம்புவை பயன்படுத்தினாலே போதுமானது.

கண்டிஷனர்
ஷாம்பு போட்டு முடியை அலசிய பின் மறக்காமல் கண்டிஷனர் போட்டு அலசி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் முடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். எப்படியெனில், கண்டிஷனரில் கூந்தலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்திருப்பதால், அவை கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். முக்கியமாக இதை தடவிய பின், கூந்தலை நன்றாக அலச வேண்டும்.

ஷாம்புவில் கவனிக்க வேண்டிவை
ஐசோப்ரோபில் ஆல்கஹபல், ப்ரொபைலின் க்ளைகோல், பாலிஎத்திலின் க்ளைகோல், சோடியம் லாரில் சல்பேட் (SLS), பார்மாலிஹைட் போன்ற இராசயங்கள் உள்ள ஷாம்புவை அறவே தவிர்க்க வேண்டும்.

இயற்கையாக காய வைக்கவும்
கூந்தலை காய வைக்கும் போது, துணியால் தட்டி காய வைக்க வேண்டாம். இயற்கையான காற்றில் மென்மையாக காய வைக்க வேண்டும். இல்லையென்றால் கூந்தல் முறிந்து விடும்.



Click it and Unblock the Notifications