Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் ஹேர் மாஸ்க்குகள்!!!
கூந்தல் பற்றிய பிரச்சனைகளை சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அந்த அளவு பிரச்சனைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக கூந்தல் உதிர்தல் யாருக்கெல்லாம் உள்ளது என்று கேட்டால், இல்லையென்று சொல்பவர்களை பார்க்கவே முடியாது. மேலும் சிலர் பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பர். அதற்கும் எத்தனையோ சிகிச்சைகளை மேற்கொண்டிருப்பார்கள். இருப்பினும் அதற்கான முடிவு இது தான் என்று கூற முடியாது. இந்த பிரச்சனையை தீர்க்க ஒரே வழியென்றால், அது முறையான பராமரிப்பு தான்.
இந்த பராமரிப்புகளை சரியாக மேற்கொண்டு வந்தால், கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகளை அறவே தவிர்க்கலாம். அந்த மாதிரியான கூந்தல் பராமரிப்பிற்கு முக்கியமானது என்றால் அது இயற்கையான பொருட்களை வைத்து ஹேர் பேக்குகள் போடுவது தான். இப்போது அந்த ஹேர் பேக்குகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனை கூந்தலுக்கு போட்டு, கூந்தல் வளர்ச்சியை அதிகமாக்குங்கள்.

வல்லாரை மற்றும் மருதாணி மாஸ்க்
வல்லாரை ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. அதிலும் இந்த மாஸ்க் நினைவு சக்தியை அதிகரிப்பதோடு, கூந்தலுக்கு மிகவும் ஆரோக்கியத்தையும் தரும். அதிலும் கூந்தல் வளர்ச்சியை அதிகரித்தல், முடியை கருமையாக வைப்பது மற்றும் கூந்தல் உதிர்தலை தடுத்தல் போன்றவற்றில் சிறந்ததாக உள்ளது. அதற்கு வல்லாரை பவுடரை, ஹென்னா பவுடருடன் சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, கூந்தலில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு, குளிக்க வேண்டும். முக்கியமாக, இந்த பேக் போடும் முன், தலைக்கு தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயால் மசாஜ் செய்ய வேண்டும்.

செம்பருத்தி பூ மாஸ்க்
இந்த மாஸ்க்கில் இரண்டு செம்பருத்தி பூவை, இரவில் படுக்கும் முன் ஒரு கப் நீரில் ஊற வைத்து, காலையில் அதனை அரைத்து, 1/4 கப் ஆலிவ் ஆயில் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பாலுடன் சேர்த்து கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும் படியாக தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும்.

சூடான எண்ணெய் மசாஜ்
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க எண்ணெய் மசாஜை விட சிறந்தது வேறு எதுவுமில்லை. எனவே கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமெனில், எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து குளிக்க வேண்டும். அதுவே பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, வாரதத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

ஹென்னா மாஸ்க்
ஹென்னா எனப்படும் மருதாணி கூந்தலை அடர்த்தியாகவும், நீளமாகவும், பட்டுப் போன்றும் வளரச் செய்யும். எனவே இந்த மருதாணியை மூலப்பொருளாக கொண்டு, அத்துடன், கறிவேப்பிலை, செம்பருத்தி இலைகள் மற்றும் வெந்தயம் சிறிது சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, சிறிது தயிர் ஊற்றி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 40-45 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில், ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

த்ரிப்லா மாஸ்க் (Triphala Mask)
இந்த மூலிகை ஹேர் மாஸ்க்கை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். அதற்கு த்ரிப்லா எனப்படும் நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் பூந்திக்கொட்டை ஆகியவற்றால் செய்யப்பட்ட பொடியுடன், வல்லாரை மற்றும் துளசியை சேர்த்து அரைத்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications