Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தலையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறதா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...
கூந்தல் நன்கு அழகாக இருந்தால் மட்டும் போதாது. கூந்தல் நன்கு நறுமணத்துடனும் இருக்க வேண்டும். ஆனல் அவ்வாறு கூந்தலை நறுமணத்துடன் வைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. கூந்தல் நன்கு மணத்துடன் இருக்க வேண்டுமெனில், முதலில் கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசுவதற்கான காரணத்தை அறிய வேண்டும்.
பொதுவாக கூந்தலை சரியாக நீரில் அலசாவிட்டால், கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசும். ஏனெனில் வியர்வையானது நீண்ட நாட்கள் தலையில் தங்கினால், அவை துர்நாற்றத்தை ஏற்படுத்தி, ஸ்காப்பில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இத்தகைய துர்நாற்றத்தைப் போக்குவதற்கு, நல்ல நறுமணமிக்க எண்ணெய்களை கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.
அதுமட்டுமல்லாமல், கூந்தலில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்திற்கு, ஹேர் மாஸ்க் மற்றும் பேக்குகள் கூட காரணமாக இருக்கும். உதாரணமாக, முட்டை கூந்தலுக்கு மிகவும் நல்லது என்று கூந்தலுக்கு பயன்படுத்தியப் பின், கூந்தலில் இருந்து முட்டையின் துர்நாற்றமானது வீசும். ஆகவே இத்தகைய ஹேர் மாஸ்க்குகளைப் போட்டப் பின்பு, கூந்தலின் மணத்தை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து நறுமணமிக்கதாக வைத்துக் கொள்ளலாம்.
அதிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு, கூந்தலின் நறுமணத்தை அதிகரித்தால் தான், எப்போதும் சிறந்தது. இப்போது கூந்தலின் நறுமணத்தை அதிகரிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.

தலைக்கு குளிக்கவும்
எப்போது தலைக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்க வேண்டும். ஏனெனில் தற்போது சுற்றுச்சூழல் மிகவும் மோசமானதாக இருப்பதால், தலைக்கு எளிதில் தூசிகள் படிய வாய்ப்புள்ளது. ஆகவே தொடர்ச்சியாக ஒருநாள் விட்டு ஒருநாள் குளித்தால், கூந்தலின் நறுமணத்தை தக்க வைக்கலாம்.

எலுமிச்சை
எலுமிச்சையை கூந்தலுக்குப் பயன்படுத்தினாலும், கூந்தல் நறுமணத்துடன் இருக்கும். மேலும் பொடுகு இருந்தாலும் நீங்கிவிடும். எனவே எலுமிச்சை சாற்றை கூந்தலுக்கு தடவி, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் ஒரு சிறந்த நறுமணமூட்டும் பொருள். இது சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. ஆனால் கூந்தலுக்கு அவ்வளவு பெரிய நன்மையை அளிக்காவிட்டாலும், கூந்தலுக்கு ரோஸ் வாட்டரைத் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் நறுமணத்துடன் இருக்கும்.

மல்லிகை எண்ணெய்
நறுமணமிக்க எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்தினாலும், கூந்தலின் வாசனை அதிகரிக்கலாம். அதிலும், மல்லிகை எண்ணெயைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால், கூந்தல் நறுமணத்துடன் இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

பூக்கள்
பெண்களுக்கு பொதுவாக கூந்தலுக்கு பூ வைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே தலைக்கு தினமும் நல்ல நறுமணமிக்க பூக்களை வைப்பதன் மூலம், கூந்தலின் நறுமணத்தை அதிகரிக்கலாம்.

செம்பருத்தி எண்ணெய்
பொதுவாக செம்பருத்தி எண்ணெய் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. அதிலும் அந்த எண்ணெயை கூந்தலுக்கு தடவி வந்தால், கூந்தல் கருமையடைவதுடன், மயிர்கால்கள் நன்கு வலிமையாகும். மேலும் செம்பருத்தி எண்ணெயில் நல்ல நறுமணம் இருப்பதால், இதனை கூந்தலுக்கு பயன்படுத்த, கூந்தலில் நறுமணமானது வீசும்.

சாம்பிராணி புகை
அக்காலத்தில் எல்லாம் முடியை உலர வைப்பதற்கு, சாம்பிராணி புகையைப் போடுவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம், இயற்கையாகவே கூந்தலின் நறுமணத்தை தக்க வைக்கலாம்.

ஹென்னா
ஹென்னா என்னும் மருதாணிப் பொடியை கூந்தலுக்கு பயன்படுத்தினால், நரைமுடியானது நிறம் மாறுவதோடு, கூந்தலும் நன்கு நுறுமணத்துடன் இருக்கும்.

தேயிலை நீர்
கொதிக்கும் நீரில் சிறிது தேயிலையை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, பின் அதனை வடிகட்டி, அந்த நீரைக் கொண்டு கூந்தலை அலசினால், கூந்தல் நன்கு மணத்துடன் இருக்கும்.

வெப்பத்தில் இருந்து விலகி இருக்கவும்
ஒருவேளை ஸ்கால்ப்பில் அதிகப்படியான வியர்வை உண்டாகி துர்நாற்றம் வீசுவதால், மேற்கூறிய அனைத்து முறைகளைப் பின்பற்றியும் கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசினால், வெப்பமான இடத்தில் இருந்து விலகி, நல்ல குளிர்ச்சியான இடத்தில் இருப்பதே சிறந்தது.



Click it and Unblock the Notifications
