Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
எண்ணெய் பசை கூந்தலா? இதைப் படிங்க !

ஒரு கப் தண்ணீரில் ஒரு எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். இந்த தண்ணீரை தெளித்து தலையில் ஊறவைக்கவும். எலுமிச்சையில் உள்ள அமிலம் கூந்தலின் எண்ணெய் பசை தன்மையை சீராக்குகிறது. அரைமணி நேரம் ஊறியபின்னர் கூந்தலை ஷாம்பு போட்டு அலசவும்.
வெள்ளை வினிகரை இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து அதனை ஒரு கப் தண்ணீரில் ஊற்றி தலையில் ஊறவைக்கவும். 20 நிமிடம் ஊறவைத்து அலச எண்ணெய் பசை நீங்கும்.
தேங்காய் எண்ணெயை மெதுவாக சூடேற்றவும். வெதுவெதுப்பான சூழலில் கூந்தலின் வேர்கால்களில் படுமாறு தேய்த்து மசாஜ் செய்யவும். பின்னர் கூந்தலை அலச எண்ணெய் பசை சரியாகும்.
புதினா இலையை நன்கு கொதிக்க வைத்து அதனை ரோஸ் வாட்டரில் கலந்து தலைக்கு தேய்த்து ஊறவைக்கவும். பின்னர் தலைக்கு ஷாம்பு போட்டு அலச கூந்தல் இயற்கை எண்ணெய் தன்மையோடு பளபளப்பாக இருக்கும்.
டீ இலையை நன்கு கொதிக்க வைத்து அதனை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம். கற்றாலை ஜெல்லுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து ஊறவைத்து மைல்டான ஷாம்பு தேய்த்து குளிக்கலாம்.
வைட்டமின் உணவுகள்
கூந்தலின் எண்ணெய் பசை சீராக இருக்க வைட்டமின்கள் பி3, பி5, எ, சி, இ போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ளவேண்டும். துத்தநாகம் கூந்தலின் எண்ணெய் பசை தன்மையை சீராக்கும். பழங்கள், காய்கறிகள், தயிர் போன்றவை கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். பொடுகுத் தொல்லையை நீக்கும். அனைத்தையும் விட தண்ணீர் சரியான அளவில் பருகுவதும் கூந்தலை சீராக பராமரிக்க உதவும்.



Click it and Unblock the Notifications
