Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
கருமையான கூந்தலை பெறுவதற்கு வீட்டிலேயே எண்ணெய் இருக்கு!!!

* ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன், 10 செம்பருத்தி பூக்களை போட்டு, அந்த எண்ணெயை வெயிலில் வைத்து, பூவானது எண்ணெயில் முழுவதும் மூழ்கும் வரை வைக்கவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு சூடேற்றி, பின் குளிர்ந்ததும், ஒரு நாள் விட்டு அதனை கூந்தலுக்கு தடவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து கூந்தலுக்கு தடவி வந்தால், கூந்தல் நன்கு கருமையாக வளர்வதோடு, அடர்த்தியாகவும் வளரும்.
* ஒரு பௌலில் தண்ணீரை விட்டு லேசாக சூடேற்றி, அதில் 100 மல்லிகைப் பூக்களை போட்டு, இரண்டு நாட்கள் மூடி ஊற வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து, அந்த தண்ணீரை பார்த்தால், தண்ணீரின் மேல் ஒருவித எண்ணெய் போன்ற பொருள் மிதக்கும். பின்னர் அந்த பூக்களை வெளியே போட்டு, அந்த எண்ணெயை தினமும் படுக்கும் முன் கூந்தலுக்கு தடவி, மறுநாள் கூந்தலை அலசி வரவும். இது ஒரு சிறந்த ஹேர் அரோமா தெரபி போல் இருக்கும். இதனால் கூந்தலானது பட்டுப்போல் மின்னுவதோடு, அதிலிருந்து வரும் வாசனை தலைவலியை சரிசெய்யும்.
* இரவில் படுக்கும் முன், பத்து நெல்லிக்காயை 1 லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஊற வைக்கவும். பின்பு அதனை மறுநாள் காலையில் கொதிக்க வைத்து, சூடானது ஆறியதும், அந்த எண்ணெயை வாரத்திற்கு மூன்று முறை தடவ வேண்டும். நெல்லி ஒரு சிறந்த சுத்தப்படுத்தி, அதிலும் இது கூந்தலுக்கு நல்ல நிறத்தை தரும். மேலும் இது கூந்தலுக்கு ஒரு நல்ல தரத்தையும் தரும்.
* செம்பருத்திப் பூ, மருதாணி இலைகள், கறிவேப்பிலை இலைகள், கசகசா இலைகள் நீரில் ஊற வைத்தது, வேப்பிலை, வெந்தயம் போன்றவற்றை நன்கு காய வைத்து, அதனை அரைத்து, உருண்டைகள் போல் செய்து, நல்லெண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை தேய்த்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாகவும், கருமையாகவும் வளரும்.
மேலே சொன்ன அனைத்து எண்ணெய்களையும் இரவில் படுக்கும் முன்பு பயன்படுத்த வேண்டும். அதிலும் இந்த எண்ணெய்களை தடவிய பின், வெளியே செல்ல வேண்டுமென்றால், குளிர்ந்த நீரில் அலசியப் பின்னரே செல்ல வேண்டும். அதனால் கூந்தலானது கருமையாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications