Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
கூந்தல் எண்ணெய் பசையா இருக்கா? இதோ சில டிப்ஸ்...

1. எண்ணெய் பசை போக ஒரு சிறந்த டிப்ஸ்-னா தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். எண்ணெய் பசை அதிகமாக இருப்பவர்கள் தினமும் தலைக்கு குளிப்பது நல்லது. ஏனென்றால் இவர்களது உடலில் எண்ணெய் சுரப்பி அளவுக்கு அதிகமாக சுரக்கிறது. இதனாலே கூந்தல் எண்ணெய் பசையோடு இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் குளித்தால் தலையானது சுத்தமாக இருக்கும்.
2. தலைக்கு குளிக்கும் போது, தலைக்குப் போடும் ஷாம்புவை பார்த்து வாங்க வேண்டும். ஏனென்றால் தற்போது வந்துள்ள ஷாம்புகள் அனைத்திலும், முடி வறண்டு காணப்படாமல் சற்று எண்ணெய் பசையோடு காணப்பட வேண்டும் என்பதற்காக, அதற்கேற்றவாறு தயாரித்துள்ளனர். ஆகவே அப்பேற்பட்ட ஷாம்புவை தவிர்த்தல் நல்லது.
3. பொதுவாக பெண்கள் அனைவருக்கும் தலையில் கை வைக்காமல் இருக்கவே முடியாது. அப்படி வைப்பதால் கையில் இருக்கும் எண்ணெய் தலையில் தங்கி, பின் முடி பார்க்க எண்ணெய் பசையோடு காணப்படும். ஆகவே தலையில் கை வைக்க வேண்டாம். மேலும் தலைக்கு பயன்படுத்தும் சீப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
4. வெளியே செல்லும் போது ஸ்கார்ப் அல்லது தொப்பியை போட்டு செல்லவும். இதனால் தலையில் தூசி படியாமல் இருக்கும். பெரும்பாலும் சூரிய ஒளி நேரடியாக முடியில் படுவதால் முடி அதிகமாக உடைவதோடு, உதிரவும் செய்யும். ஆகவே மறக்காமல் ஏதேனும் ஒன்றை அணிந்து செல்லுங்கள்.
5. அதிகமாக வேர்த்தால் முடியானது ஈஸியாக எண்ணெய் பசை அடைந்துவிடும். ஆகவே அதிகமாக வேர்ப்பவர்களும் தினமும் தலைக்கு குளிக்க வேண்டும்.
6. எலுமிச்சை, எண்ணெய் பசை போக்குவதற்கு சிறந்த ஒன்று. தலைக்கு குளிக்கும் முன், சிறிது எலுமிச்சை சாற்றுடன் தயிரைக் கலந்து தலைக்கு தடவி 30 நிமிடம் கழித்து குளிக்கவும். இவ்வாறு செய்தால் எண்ணெய் பசை குறைவதோடு, தலையில் பொடுகும் வராது.
இவை அனைத்தையும் செய்வதோடு தினமும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் சாப்பிடும் போது காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். இதனால் கூந்தலானது எண்ணெய் பசை அடையாமல் இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications