Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
தலைமுடி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா? அப்ப இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் 2 முறை போடுங்க...
Hair Care Tips In Tamil: உங்கள் தலைமுடி ஒல்லியாகவே உள்ளதா? உங்கள் தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா? அதற்காக என்ன செய்வது என்று தேடிக் கொண்டிருக்கிறீர்களா? தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லையா?
அப்படியானால் இயற்கை வழிகளை முயற்சித்துப் பாருங்கள். இப்படி இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், எவ்வித பக்க விளைவும் ஏற்படாது. மேலும் தலைமுடியும் வலுவாக இருக்கும். முக்கியமாக தலைமுடி உதிர்வது முற்றிலும் நின்று, முடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.

கீழே தலைமுடியை அடர்த்தியாக வளரத் தூண்டும் ஒருசில இயற்கை ஹேர் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் உங்களுக்கு எது பொருத்தமானதாக அல்லது ஈஸியாக உள்ளதோ, அவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். இதனால் நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
1. தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலை சம அளவில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வேண்டுமானால், குறைந்தது 8 மணிநேரம் ஊற வையுங்கள்.
* ஆனால் இந்த ஹேர் மாஸ்க்கிற்கு கெமிக்கல் அதிகம் நிறைந்த ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசக்கூடாது. இல்லாவிட்டால், முடியின் உள்ள எண்ணெய் பசை முழுமையாக நீங்கிவிடும்.
2. பப்பாளி மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு மிக்சர் ஜாரில் சிறிது பப்பாளி துண்டுகளை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த பப்பாளி விழுதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். ஒருவேளை உங்களுக்கு பப்பாளி வாசனை பிடிக்காதெனில், மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, தலைமுடி அடர்த்தியாக வளரும்.
3. வாழைப்பழ மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு நன்க கனிந்த 2 வாழைப்பழத்தை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். சிறப்பான பலனைப் பெற அத்துடன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த விழுதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
4. தயிர் மற்றும் கற்றாழை மாஸ்க்
* இந்த மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் தயிர் சேர்த்து நன்கு அடித்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப் மற்றும் முடியின் நுனிப்பகுதி வரை நன்கு தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
5. க்ரீன் டீ மற்றும் தேன் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் க்ரீன் டீயை எடுத்து தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஈரமான தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
6. வெந்தயம் மற்றும் தேங்காய் பால் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு வெந்தய விதைகளை இரவு தூங்கும் போதே நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மறுநாள் காலையில் ஊற வைத்த வெந்தய விதைகளை தேங்காய் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, தலைமுடி அடர்த்தியாக வளரும்.
7. பூண்டு மற்றும் வெங்காய மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு சிறிது பூண்டு மற்றும் வெங்காயத்தை எடுத்து தட்டி, தேங்காய் எண்ணெயில் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த எண்ணெயை தலைமுடியில் தடவி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க் ஆரம்பத்தில் சற்று அரிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் 2-3 முறை பயன்படுத்தினால், அந்த அரிப்பு குறைவதோடு, முடி உதிர்வதும் குறைவதைக் காணலாம்.
* வெங்காயம், பூண்டின் வாசனை அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், அத்துடன் சில துளிகள் லாவெண்டர் அல்லது ரோஸ்மேரி எண்ணெயை கலந்து கொள்ளலாம்.
8. நெல்லிக்காய் மற்றும் தயிர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
9. ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் அதை 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, தலைமுடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
10. அவகேடோ மற்றும் வாழைப்பழ மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு மிக்சர் ஜாரில் அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை ஈரமான தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வர, முடி நன்கு பட்டுப்போன்றும் அடர்த்தியாகவும் வளர்வதைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications