Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
முடி அதிகமா கொட்டுதா? இந்த இலைகளை வாரத்துக்கு 2 முறை இப்படி யூஸ் பண்ணுங்க.. டக்குன்னு குறையும்...
Hair Care Tips In Tamil: குளிர்காலத்தில் சரும பிரச்சனைகளை மட்டுமின்றி, முடி உதிர்தல் பிரச்சனையையும் அதிகம் சந்திக்க நேரிடும். இப்படி தலைமுடி உதிர்வரை கண்டுகொள்ளாமல் இருந்தால், பின் அது வழுக்கையை ஏற்படுத்தி ஒருவரது தோற்றத்தை மோசமாக்குவதோடு மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்வதை உணர்ந்தால், உடனே முடி உதிர்வதைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
தலைமுடி உதிர்வதைத் தடுக்க உதவும் ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பல பொருட்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். குறிப்பாக ஒருசில இலைகள் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இப்போது பலவீனமாக இருக்கும் தலைமுடியை வலுவாக்க உதவும் இலைகளையும், அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் காண்போம்.

கற்றாழை
ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு இலை தான் கற்றாழை. இந்த கற்றாழையின் ஜெல்லில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவைகள் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. அதற்கு கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர முடி உதிர்வது தடுக்கப்படும்.
வேப்பிலை
வேப்பிலை ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. வேப்பிலையை ஸ்கால்ப்பில் பயன்படுத்தும் போது, அது தலைமுடி இழப்புக்கு காரணமான ஸ்கால்ப் தொற்றை சரிசெய்யும். அதற்கு 1 கைப்பிடி வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி, பின் அந்நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை உணவில் நல்ல ப்ளேவருக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை, அதில் பீட்டா கரோட்டீன், புரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை மயிர்கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுக்கும். அதற்கு கறிவேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரம் 1-2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வெந்தயக்கீரை
வெந்தயக்கீரை மருத்துவ குணம் அதிகம் நிறைந்தது. இந்த வெந்தய கீரை உடலுக்கு மட்டுமின்றி, தலைமுடிக்கும் ஏராளமான நன்மைகளை வழங்குகின்றன. அதுவும் இதில் நிக்கோடினிக் அமிலம் மற்றும் புரோட்டீன்கள் அதிகம் இருப்பதால், இவை மயிர்கால்களை வலுப்படுத்தி, வளர ஊக்குவிக்கின்றன. அதற்கு வெந்தயத்தை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை அரைத்து பேஸ்ட் செய்து, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம், முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, முடி உதிர்வதும் தடுக்கப்படும்.
செம்பருத்தி இலைகள்
செம்பருத்தி இலைகள் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, நரைமுடியை தடுக்க உதவும். அதுவும் இதில் வைட்டமின் சி, அமினோ அமிலங்கள் போன்றவை அதிகம் உள்ளன. இவை ஸ்கால்ப்பிற்கு நல்ல ஊட்டச்சத்தை வழங்கி, முடியை வலுப்படுத்தும். அதற்கு செம்பருத்தி இலைகளை அரைத்து அதை தலையில் தடவி, ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
புதினா இலைகள்
புதினா இலைகள் குளிர்ச்சிப் பண்புகளை அதிகம் கொண்டது மற்றும் இது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதற்கு புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்தோ அல்லது அதை அரைத்து தலையில் தடவியோ, 10-ஸ5 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது குறைவதோடு, முடியின் அமைப்பும் மேம்படும்.
மருதாணி இலைகள்
மருதாணி இலைகளை குளிர்ச்சி பண்புகளைக் கொண்டவை என்பதை அனைவரும் அறிவோம். இந்த மருதாணி இலைகளை அரைத்து, தலைமுடியில் தடவி ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அலசும் போது, தலைமுடி உதிர்வது குறைவதோடு, முடியும் நன்கு பளபளவென்று இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
