Latest Updates
-
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
வாழைப்பழத்தோடு இந்த பொருட்கள சேர்த்து முடியில் தடவுனா? முடி கொட்டுறது சுத்தமா நின்னுடுமாம்...!
இன்றைய நாளில் எல்லா மக்களும் முடி உதிர்தல் பிரச்சனை இருக்கிறது. முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கர்ப்பம், கருக்கலைப்பு, பாலூட்டுதல், மாதவிடாய் நிறுத்தம், முடி அலங்காரம் மற்றும் நாளமில்லாச் சுரப்பி செயலிழப்பு போன்ற நிலைகள் பெண்களுக்கு முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.
வாழைப்பழத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அது உங்கள் தலைமுடிக்கு அற்புதங்களை செய்யும் என்று தெரியுமா? ஆம், ஈரப்பதமூட்டும் பண்புகளுக்காக அறியப்படும் வாழைப்பழம் வறண்ட முடி மற்றும் சருமத்திற்கு நல்ல சிகிச்சை அளிப்பதாகக் கூறப்படுகிறது.

உங்கள் தலைமுடிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் வாழைப்பழத்தில் உள்ளன. எனவே, உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருந்தால், வாழைப்பழ ஹேர் மாஸ்க்குகளை முயற்சி செய்யுங்கள். வாழைப்பழ ஹேர் மாஸ்க் உங்கள் முடிக்கு வழங்கும் அற்புத நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
முடி வளர்ச்சிக்கு வாழைப்பழம்
இயற்கையாகவே முடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவும் மிகவும் நம்பிக்கைக்குரிய இயற்கைப் பொருட்களில் ஒன்று வாழைப்பழம். வாழைப்பழத்தில் பொட்டாசியம், சிலிக்கா, மெக்னீசியம், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் சி, நார்ச்சத்து, இயற்கை எண்ணெய்கள் மற்றும் புரதச்சத்து நிரம்பியுள்ளது. மேலும் வாழைப்பழ தோலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே வாழைப்பழத்தின் கூழ் மற்றும் தோல் மூலம் ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
முடி வளர்ச்சிக்கு வாழைப்பழத்தை எப்படி பயன்படுத்துவது?
வாழைப்பழத்தை ஒரு உணவுப் பொருளாக சாப்பிடலாம் மற்றும் வாழைப்பழ கூழை அல்லது தோலை உச்சந்தலையில் தடவுவதன் மூலமாகவும் நாம் பயன்படுத்தலாம். வாழைப்பழத் தோல் சரும பராமரிப்புக்கு நல்லது. நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில வாழைப்பழ ஹேர் மாஸ்க்குகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
வாழைப்பழம் மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்
இரண்டு பழுத்த வாழைப்பழங்களை மென்மையாக மசித்துக்கொள்ள வேண்டும். ஒரு கப் தயிரையும் வாழைப்பழ கலவையையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ கொண்டு முடியை அலச வேண்டும். நல்ல முடிவுகளை பெற வாரத்திற்கு இரண்டு முறை இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தலாம்.
வாழை மற்றும் வெண்ணெய் முடி மாஸ்க்
வைட்டமின் ஈ மற்றும் பயோட்டின் நிறைந்த அவகேடோவையும் வாழைப்பழத்துடன் ஒன்றாக பயன்படுத்தலாம். இரண்டு பொருட்களையும் பேஸ்ட்டை அரைத்து உச்சந்தலையில் தடவி 15 முதல் 30 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். பின்னர், லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி உச்சந்தலையில் கழுவ வேண்டும்.
வாழை மற்றும் தேன் முடி மாஸ்க்
வாழைப்பழத்தை மசித்து தேனுடன் ஒன்றாக கலந்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது உங்கள் உச்சந்தலையின் வறட்சியைக் குறைக்க உதவுவதோடு, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுமாம்.
வாழைப்பழம், பப்பாளி மற்றும் தேன் ஹேர் மாஸ்க்
முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கும் ஃபோலிக் அமிலத்தை வெளியிடும் வாழைப்பழம் மற்றும் பப்பாளியை சிறிய துண்டுகளாக நறுக்கி பிசைந்து கொள்ளவும். அதனுடன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் ஆகும் வரை கலக்கவும். அதை உங்கள் உச்சந்தலையில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ கொண்டு முடியை அலச வேண்டும்.
வாழைப்பழம் மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க்
பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின்களின் நல்ல ஆதாரமான கற்றாழை ஜெல்லையும் வாழைப்பழத்தையும் பிளெண்டரில் சேர்த்து அரைக்கவும். அந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி, 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து முடியை அலசுங்கள்.
வாழைப்பழம் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இயற்கை ஹேர் மாஸ்க்குகள் உங்கள் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும், முடி உதிர்தல், வறண்ட மற்றும் பொலிவிழந்த முடி பிரச்சனையை தீர்க்கவும் வாழைப்பழம் உதவும்.



Click it and Unblock the Notifications


