Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா?
தலைமுடி அதிகமா கொட்டுதா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. 2 மடங்கு வேகத்தில் வளரும்...
Hair Care Tips In Tamil: உங்களுக்கு தலைமுடி அதிகம் உதிர்கிறதா? ஒருவருக்கு தலைமுடி அதிகம் உதிர்கிறது என்றால், ஒன்று தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருக்கலாம் அல்லது தலைமுடிக்கு போதுமான பராமரிப்பை கொடுக்காமல் இருக்கலாம். பொதுவாக தலைமுடிக்கு பராமரிப்பு கொடுப்பது என்று வரும் போது, முதலில் அனைவரும் செய்வது எண்ணெய் பயன்படுத்து தான்.
ஆனால் எண்ணெய் பயன்படுத்தினால் மட்டும் தலைமுடி உதிர்வது நின்று, அதன் வளர்ச்சி அதிகரித்துவிடாது. அத்துடன் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஒருசில பொருட்களைக் கொண்டு ஹேர் பேக் போடுவதன் மூலமும், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

உங்களுக்கு தலைக்கு எண்ணெய் வைக்க பிடிக்காதா? அப்படியானால் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுங்கள். இப்படி கொடுப்பதன் மூலம், முடி உதிர்வது நின்று, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
1. கற்றாழை
கற்றாழை மயிர்கால்களை வலுப்படுத்தி, முடி மெலிவதைக் குறைத்து, முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் வளர்வதை உறுதி செய்கிறது. கற்றாழையில் உள்ள புரோட்டியோலிடிக் என்சைம்கள் ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இப்படிப்பட்ட கற்றாழையை பின்வருமாறு பயன்படுத்த வேண்டும்.
* முதலில் நற்பதமான கற்றாழையின் ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப்பில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு அதை 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும்.
2. வெங்காய சாறு
வெங்காயத்தில் சல்பர் உள்ளது. இது முடி அமைப்புக்கு காரணமான புரதமான கெரட்டின் உற்பத்தியில் முக்கிய பங்கை வகிக்கிறது. வெங்காயத்தின் சாற்றினை ஸ்கால்ப்பில் பயன்படுத்தும் போது அது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் முடி உதிர்வதைக் குறைத்து, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதற்கு வெங்காயத்தை பின்வருமாறு பயன்படுத்துங்கள்.
* வெங்காயத்தின் சாற்றினை எடுத்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின் 15-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலச வேண்டும்.
* வெங்காயத்தின் மணத்தைக் குறைக்க, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
3. வெந்தயம்
வெந்தயத்தில் உள்ள லிசித்தின் என்னும் பொருள் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி உடைவதை தடுக்கவும் உதவுகிறது. வெந்தயத்தைக் கொண்டு முடிக்கு பராமரிப்பை கொடுக்கும் போது, அது ஸ்கால்ப்பில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கிறது. அதற்கு வெந்தயத்தை பின்வருமாறு பயன்படுத்துங்கள்.
* 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் அதை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும்.
4. ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி புரிந்து, முடியின் வளர்ச்சிக்கு தேவையான வளமான சூழலை உருவாக்குகிறது. எனவே முடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆப்பிள் சீடர் வினிகரை பின்வருமாறு பயன்படுத்துங்கள்.
* ஒரு கப் நீரில் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் தலைக்கு ஷாம்பு போட்டு அலசிய பின், இந்த ஆப்பிள் சீடர் வினிகர் நீரை தலையில் ஊற்றி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
5. க்ரீன் டீ
க்ரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் ஸ்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்கிறது. எனவே இந்த க்ரீன் டீயை பயன்படுத்தி முடிக்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், முடி மெலிவது குறைந்து, மயிர்கால்கள் வலுவடைவதோடு, முடியின் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும். அதற்கு க்ரீன் டீயை பின்வருமாறு பயன்படுத்துங்கள்.
* க்ரீன் டீயை தயாரித்த பின், அதை குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை தலையில் ஊற்றி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 10-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications