Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
பிரசவத்துக்கு பின் இழந்த பொலிவான சருமத்தை மீண்டும் பெறுவது எப்படி? விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஜெயஸ்ரீ...!
Skin Care Tips: அனைத்து பெண்களுமே மென்மையான சருமம் இருக்க வேண்டுமென விரும்புவார்கள். ஆனால் இது அனைத்து நேரங்களிலும் இதை பராமரிப்பது சாத்தியமில்லை, தெளிவான சருமம் பெறுவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும்.
பிரசவத்திற்கு பின் உள்ள காலம் உங்கள் சருமத்தை மற்ற அனைத்தையும் விட அதிகம் பாதிக்கும். கவலை, தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு தாமதமான இரவு மற்றும் தொடர்ச்சியான வேலை உங்கள் சருமத்தை வெகுவாக பாதிக்கும். பிரசவத்திற்கு பின் சரியாக சருமத்தை கவனிப்பது இழந்த சருமத்தை மீண்டும் பெற உதவும். பிரசவத்திற்கு பின் இழந்த சருமப் பொலிவை மீட்க அழகுக்கலை நிபுணர் ஜெயஸ்ரீ கூறும் பயனுள்ள குறிப்புகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சூடான துணியில் முகத்தை மூடி வைப்பது
சூடாகவும், கதகதப்பாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல், சூடான துண்டுகள் உங்கள் சருமத்தின் துளைகளை திறந்துவிடுகின்றன, இதனால் நீங்கள் பயன்படுத்தும் அழகு பொருட்கள் பொதுவாக மேற்பரப்பில் மட்டும் பூசப்படுவதைக் காட்டிலும் ஆழமாக ஊடுருவுகின்றன. ஒரு மெல்லிய துண்டு வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு இதனை உங்கள் வீட்டிலேயே எளிதில் செய்யலாம்.
ஷாம்பூவால் முகத்தை கழுவுங்கள்
உலர்ந்த, உதிரும், மற்றும் வீக்கமடைந்த தோல் இருந்தால் அதற்கான தீர்வு உங்கள் குளியலறையிலேயே இருக்கலாம். உங்கள் முகத்தை பொடுகை குறைக்கும் ஷாம்பூவை வைத்து வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கழுவுங்கள், உங்கள் சருமம் இதனை தாங்குமென்றால் மட்டும் செய்யவும். ஒவ்வாமை உள்ளவர்கள் இதனைத் தவிர்க்கவும். இதன் விளைவுகள் உங்கள் சருமத்தை பொறுத்து மாறுபடலாம், எனவே சிறிய அளவில் முதலில் உபயோகப்படுத்தி விளைவுகளை சோதித்து விட்டு அதன்பின் தொடரவும்.
சுத்தப்படுத்துவதற்கு பாலை பயன்படுத்தவும்
நீங்கள் மென்மையான மற்றும் இளமையான சருமத்தை விரும்புகிறீர்கள் என்றால் சருமத்தில் பாலை அதிகம் பயன்படுத்துங்கள். பால் மிகவும் பயனுள்ள சுத்தப்படுத்தியாகும், ஏனெனில் இதிலுள்ள லாக்டிக் அமிலம் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது மற்றும் கொலாஜனை அதிகரிக்க உதவுகிறது. பாலை சுத்தப்படுத்தியாகவும், டோனராகவும், ஸ்பாட் சிகிச்சைக்கும் தினசரி பயன்படுத்தலாம்.
ஐஸ்க்கட்டி பேஷியல்
முகத்தை கழுவி சுத்தம் செய்தபின் பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்புங்கள். பின் சில ஐஸ்கட்டிகளை அதில் போடுங்கள். உங்கள் முகத்தை 10 நொடிகள் அந்த நீரில் மூழ்கும்படி செய்யுங்கள். பல முறை மீண்டும் மீண்டும் இதை செய்யவும். இதன் குளிர் உங்கள் சரும துளைகள் மேம்படுத்த உதவுகிறது, பின் முகத்தை நன்றாக துடைக்கவும். உங்களுடையது எண்ணெய் சருமமாக இருந்தால், இதில் எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் சேர்க்கவும்.
நிபுணரின் உதவியை நாடுங்கள்
அற்புதமான சருமங்கள் வீட்டில்தான் உருவாக்கப்படுகிறது, ஆனால் சில முக்கியமான விஷயங்களை வீட்டிலிருந்தே செய்யமுடியாது. சருமத்தை மெருகூட்டவும், அழகாக்கவும் சில நிபுணத்துவ பேஷியல்களை செய்யவும். இது உங்கள் சருமத்தை மென்மையாக்கி இயற்கையான, இளமையான சருமத்தை அளிக்கிறது.
தூக்கம்
போதுமான தூக்கம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் நீங்கள் புத்துணர்ச்சியாக உணர உதவுகிறது, ஆனால் அதேசமயம் உங்கள் தோல் குணமடைய மற்றும் புதுப்பித்துக்கொள்ள போதுமான நேரம் கொடுங்கள். போதுமான அளவு தூங்காவிட்டாலோ அல்லது உங்கள் தூக்கத்தின் தரம் குறைவாக இருந்தாலோ அதனை உடனடியாக சரி செய்ய முயலுங்கள்.
ஈரப்பதத்திற்கு எண்ணெய் பயன்படுத்தவும்
உங்கள் முகத்தை துடைப்பது சருமத்தை தெளிவாக்குவது போல உணரவைக்கும், ஆனால் அது உங்கள் சருமத்தை சேதப்படுத்தும், குறிப்பாக கண்களைச் சுற்றியுள்ள மென்மையான சருமத்தை எளிதில் சேதப்படுத்தும். இதற்கு மாற்றாக இயற்கையான ஈரப்பதமூட்டியாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள். உங்கள் விரலால் நேரடியாக கண்களுக்கு கீழே தேவைப்பட்டால் முகம் முழுவதும் தேய்த்து 10 நிமிடத்திற்கு பின் கழுவவும்.



Click it and Unblock the Notifications

