Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
தேங்காய் பாலைக் கொண்டு மாய்ஸ்சரைசர் மற்றும் ஸ்க்ரப்பை தயாரிப்பது எப்படி-ன்னு தெரியுமா?
தேங்காய் நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரக் கூடியது. தேங்காயில் இருந்து நாம் ஏகப்பட்ட சத்துக்களை பெற முடியும். வெறும் தேங்காயைக் கொண்டு நம் அழகை மேம்படுத்த முடியும்.
தேங்காயில் இருந்து தேங்காய் நீர் மற்றும் தேங்காய் எண்ணெய் என இரண்டையும் எளிதாக பெறலாம். தேங்காய் பால் நம் சரும ஆரோக்கியத்திலும் கூந்தல் ஆரோக்கியத்திலும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில் தேங்காய் பாலைக் கொண்டு மாய்ஸ்சரைசர், கண்டிஷனர் மற்றும் ஸ்க்ரப் இவற்றை எப்படி தயாரிக்கலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம். இந்த மாய்ஸ்சரைசர், கண்டிஷனர் மற்றும் ஸ்க்ரப் இவற்றை எளிதாக வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தி வர முடியும்.
தேங்காய் பால் ஏன் சருமத்திற்கும் கூந்தலுக்கும் சிறந்தது:
தேங்காய் பாலில் நிறைய ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. தேங்காய் பால் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தரக் கூடியது. சருமத்தை ஹைட்ரேட் செய்கிறது. இது சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது.
தேங்காய் பால் மாய்ஸ்சரைசர் செய்வது எப்படி?
* தேங்காய் பாலை மாய்ஸ்சரைசராக பயன்படுத்தி வரலாம். இது சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.
* ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் அரை கப் தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.
* இதனுடன் 1 அல்லது 2 டீஸ்பூன் கிளிசரின் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்க்க வேண்டும்.
* இப்பொழுது எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
* இதில் 4-5 சொட்டு ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய் அல்லது லாவண்டர் எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* இப்பொழுது இதை ஒரு கொள்கலனில் மாற்றி குளிர் சாதன பெட்டியில் வைத்து குளிர்விக்க வேண்டும்
* பிறகு இதை நீங்கள் மாய்ஸ்சரைசராக பயன்படுத்தி வரலாம்.
தேங்காய் பால் ஸ்க்ரப்
* ஒரு பாத்திரத்தில் சிறுதளவு ஓட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
* இப்பொழுது அதனுடன் 1 அல்லது 2 டீஸ்பூன் தேனைச் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அரைகப் தேங்காய் பாலை சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடங்களுக்கு பிறகு தேங்காய் ஸ்க்ரப்பை எடுத்து உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள். பிறகு 10-15 நிமிடங்கள் கழித்து ஸ்க்ரப்பை மெதுவாக தேய்த்து எடுங்கள்.
* அதன் பிறகு உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
* இந்த ஸ்க்ரப் உங்கள் முகம் மற்றும் மயிர்க்கால்களை சுத்தம் செய்கிறது. இதன் மூலம் முகப்பருக்களை தடுக்க முடியும். இந்த ஸ்க்ரப் மூலம் பளபளப்பான சருமத்தை நீங்கள் பெறலாம். இதை உங்கள் உச்சந்தலைக்கும் ஸ்க்ரப் ஆக பயன்படுத்தி வரலாம்.
தேங்காய் பால் கண்டிஷனர்
* உங்கள் கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க விரும்பினால் தேங்காய் பால் கண்டிஷனர் சிறந்த ஒன்றாக இருக்கும்.
* ஒரு கப் தேங்காய் பாலை எடுத்து அதில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பிறகு கூந்தலை அலச மைல்டு ஷாம்பை பயன்படுத்த வேண்டும்.
* பிறகு இந்த தேங்காய் பால் கண்டிஷனரை எடுத்து கூந்தலில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இந்த கண்டிஷனர் உங்கள் கூந்தலை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.
* தேங்காய் பால் ஒரு இயற்கையான க்ளீன்சர் மாதிரி செயல்படுகிறது. தேங்காய் பால் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.
தேங்காய் பாலின் நன்மைகள்:
* தேங்காய் பால் உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. சருமத்தை ஆற்ற பயன்படுகிறது. அரிக்கும் தோலழற்சி, தடிக்கும் தோலழற்சி போன்ற தோல் நோய்களை விரட்ட உதவுகிறது. தேங்காய் பாலில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது.
* தேங்காய் பாலில் வைட்டமின்களான சி, ஈ, பி1, பி3, பி5 மற்றும் பி6 மற்றும் இரும்பு, செலினியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இது சருமத்திற்கு நல்ல நிறத்தையும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. தேங்காய் பாலில் ஆரோக்கியமான புரதங்கள் காணப்படுகிறது. இது முடியை வலுப்படுத்த உதவுகிறது.



Click it and Unblock the Notifications