Latest Updates
-
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
தீபாவளி அன்று பளிச்சுன்னு ஜொலிக்கணுமா? அப்ப இன்று முதல் இந்த ஃபேஸ் பேக்குகளை போட ஆரம்பிங்க..
Diwali 2023: தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் தீபாவளி பண்டிகையில் அழகான புத்தம் புதிய ஆடைகளை அணிந்து, உறவினர்கள் வீட்டிற்கு சென்று பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவோம். அப்படிப்பட்ட தீபாவளி பண்டிகை நாட்களில் நீங்கள் அழகாக ஜொலிக்க விரும்புகிறீர்களா?
அப்படியானால், இன்று முதல் உங்கள் முகம் பிரகாசமாக ஜொலிக்க சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுத்து வாருங்கள். அதுவும் நீங்கள் தினமும் வெளியே சுற்றுபவராயின், பண்டிகை நாட்களில் அழகாக ஜொலிக்க, பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும்.

சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு ஒருசில ஃபேஸ் பேக்குகள் பெரிதும் உதவி புரியும். அதுவும் இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும். இப்போது சரும அழகையும், நிறத்தையும் மேம்படுத்த உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
கடலை மாவு மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டுமே பழங்காலம் முதலாக சரும அழகை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களாகும். அந்த கடலை மாவை ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, ரோஸ் வாட்டர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
2. சந்தன ஃபேஸ் பேக்
சந்தனம் மிகவும் குளிர்ச்சியான பொருள் மட்டுமின்றி, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட பொருளும் கூட. முக்கியமாக இந்த சந்தனம் சரும நிறத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. அப்படிப்பட்ட சந்தனத்தின் எண்ணெயை ஒரு பௌலில் 2-3 துளிகள் ஊற்றி, அத்துடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுதி வர நல்ல பலன் கிடைக்கும்.
3. தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
தேன், எலுமிச்சை ஆகிய இரண்டுமே சருமத்தில் மாயங்களை புரியக்கூடியவை. முக்கியமாக இவ்விரு பொருட்களும் சரும நிறத்தை அதிகரிக்கவும், சருமத்தைப் பட்டுப் போன்று மென்மையாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. அதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமை அகலும்.
4. வேப்பிலை, துளசி, மஞ்சள் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு 4 துளசி இலைகள், 3 வேப்பிலைகளை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் ஃபேஸ் பேக் போட்டு வந்தால், முகம் பொலிவோடு இருக்கும்.
5. அரிசி மாவு மற்றும் சந்தன ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், 1/2 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்த முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.



Click it and Unblock the Notifications