Latest Updates
-
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா?
மழைக்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் எப்படி தங்கள் சருமத்தை பாதுகாக்க வேண்டும்?
Diabetes Skin Care In Tamil: இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதும் தங்கள் உடல் நலத்தை கவனித்து கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் மழைக்காலத்தில் அவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது மிகவும் அவசியம்.
இந்த மழைக்காலத்தில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது அரிக்கும் தோலழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்பட நிறைய வாய்ப்பு உள்ளது. எனவே மழைக்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரும ஆரோக்கியத்தில் நிறைய கவனம் செலுத்துவது அவசியம். அதைப்பற்றி இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

சருமத்தை பாதுகாக்க சில அத்தியாவசிய குறிப்புகள்
நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் படி, சர்க்கரை நோய் எளிதாக உங்கள் சருமத்தை பாதிக்கிறது. நீடித்த உயர் இரத்த சர்க்கரையால் தோல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரும பிரச்சனைகளை அடிக்கடி கவனிப்பது மிகவும் அவசியம். தோல் அறிகுறிகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய சரும பராமரிப்பு குறிப்புகள்
சருமத்தை உலர்வாகவும் சுத்தமாகவும் வைத்திருங்கள்
பருவமழையின் போது ஈரப்பதமான சூழலால் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் சருமத்தை நன்றாக உலர்வாக வைக்க வேண்டும். தோல் மடிப்புகள் மற்றும் கால் விரல்களுக்கு இடையே உள்ள சருமத்தை உலர்வாகவும் சுத்தமாகவும் வைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் நீண்ட நேரம் ஈரமான ஆடைகளில் உட்காருவதையோ அல்லது நிற்பதையோ தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஈரமான ஆடைகள் உங்கள் சருமத்தை எரிச்சலூட்ட வாய்ப்பு உள்ளது. அவை பூஞ்சை தொற்று அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சருமத்தை ஈரப்பதமாக வைத்திருங்கள்
மழைக்காலத்திலும் சர்க்கரை நோயாளிகள் வறண்ட சரும பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே முடிந்த வரை உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருங்கள். உங்கள் சருமத்தை மென்மையாக மாற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம். முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் வறட்சியால் பாதிக்க கூடிய பகுதிகளில் மாய்ஸ்சரைசரை அப்ளை செய்யுங்கள்.
நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்
உடம்பில் இருந்து வரும் அதிக வியர்வையை தடுக்க நல்ல சுவாசிக்க கூடிய மற்றும் நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள். இது சரும பிரச்சனைகள் மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்றவற்றை போக்க உதவுகிறது. தோல் அரிப்புகளை போக்க லோஷன்களை பயன்படுத்தி வரலாம்.
சரியான காலணியை தேர்ந்தெடுங்கள்
மழைக்காலத்தில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றில் இருந்து உங்கள் கால்களை பாதுகாக்க காலணிகள் உதவுகின்றன. ரப்பர் அல்லது நீர்ப் புகாத மெஷ் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட சுவாசிக்கக்கூடிய காலணிகளை தேர்வு செய்யுங்கள். ஈரமான காலணிகள் மற்றும் காலுறைகளை நீண்ட காலத்திற்கு அணிவதை தவிருங்கள். ஏனெனில் ஈரமான காலணிகள் உங்களுக்கு கால் பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
இரத்த சர்க்கரை அளவை தினமும் சரிபார்க்க வேண்டும்
சர்க்கரை நோயாளிகள் தோல் பிரச்சினைகள் வராமல் தடுக்க அவர்களின் இரத்த சர்க்கரை அளவை தினசரி சரிபார்க்க வேண்டும். ஏனெனில் கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் வறட்சி, அரிப்பு மற்றும் காயங்கள் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து வருவது மிகவும் அவசியம்.
நீரேற்றத்துடன் இருங்கள்
சர்க்கரை நோயாளிகள் தங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பேண சருமத்தை எப்பொழுதும் நீர்ச்சத்துடன் வைத்திருப்பது அவசியம். சரியான அளவு நீரேற்றத்துடன் இருப்பது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது சரும நோய்த் தொற்றுகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
சருமத்தை தவறாமல் பரிசோதியுங்கள்
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சரும மருத்துவரை அணுகி சரும பிரச்சனைகள் குறித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சுய பரிசோதனை செய்வதும் மிகவும் நல்லது. அதே நேரத்தில் சர்க்கரை நோயாளிகள் தோல் பிரச்சினைகள் மோசமடைந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். பருவ மழைக்காலத்தில் தோலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனே சரும மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். காலம் தாழ்த்தி செல்வது உங்கள் சரும பிரச்சனைகளை மேலும் மோசமாக்கும்.



Click it and Unblock the Notifications
