Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
குத்தும் எரியும் வியர்குரு பிரச்சனையை வேரோடு விரட்ட சில எளிய வழிகள்!!!
கொளுத்தும் கோடையில் ஒவ்வொருவருக்கும் வியர்த்து கொட்டியவாறு இருக்கும். இதனால் உடலில் அரிக்கும், குத்தும், எரியும் வியர்குரு வந்து பெரும் தொல்லையாக இருக்கும். வியர்குரு பார்ப்பதற்கு சருமத்தில் சிவப்பு நிறத்தில் சிறு புள்ளிகளாக காணப்படும்.
இவை வருவதற்கு முக்கிய காரணம் போதிய காற்றோட்டம் இல்லாதது, அதிகமாக வியர்ப்பது போன்றவை தான். பெரும்பாலும் குழந்தைகள் தான் இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். இதனால் பலரும் சருமத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் டால்கம் பவுடர்கள், க்ரீம்கள் போன்றவற்றை பயன்படுத்துவோம்.
இவை தற்காலிகமாகத் தான் நிவாரணம் தருமே தவிர, நிரந்தரமாக இல்லை. ஆனால் இந்த வியர்குருவை விட ஒருசில கை வைத்தியங்களை பின்பற்றினால் நிச்சயம் வியர்குரு வருவதைத் தடுக்கலாம். சரி, இப்போது அந்த இயற்கை வைத்தியங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

ஓட்ஸ்
பாத் டப்பில் உள்ள நீரில் சிறிது ஓட்ஸ் பவுடரை சேர்த்து கலந்து, அந்நீரில் 1 மணிநேரம் உட்கார்ந்து, உடலை அதனுள் ஊற வைக்க வேண்டும். இப்படி கோடைக்காலத்தில் தினமும் இரண்டு முறை செய்து வந்தால், வியர்குரு பிரச்சனை வருவதைத் தடுக்கலாம்.

பேக்கிங் சோடா
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை, 1 கப் குளிர்ந்த நீரில் கலந்து, அந்த நீரை காட்டனில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், அரிக்கும் வியர்க்குருவில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பாகற்காய்
பாகற்காயை பேஸ்ட் செய்து, அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து கழுவினால், வியர்குருவினால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி ஊற வைத்து வந்தால், வியர்குரு பிரச்சனை நீங்கி, சருமம் குளிர்ச்சியுடன் இருக்கும்.

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் கூட வியர்குரு பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும். அதற்கு அதன் ஜெல்லை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

சீரகம்
இரவில் படுக்கும் போது சீரகப் பொடியை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வேப்பிலை
வேப்பிலையை அரைத்து குளிர்ந்த நீரில் கலந்து, அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தாலும் வியர்குரு நீங்கும் அல்லது வேப்பிலை பேஸ்ட்டை வியர்குரு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

சந்தனப் பொடி
சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர வியர்குரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

முல்தானி மெட்டி
முல்தானி மெட்டி பவுடரை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கடலை மாவு
தினமும் குளிக்கும் போது கடலை மாவு தேய்த்து குளித்து வந்தால், அதிகம் வியர்ப்பது குறைந்து, வியர்குரு வருவது தடுக்கப்படும்.



Click it and Unblock the Notifications
