Latest Updates
-
கேஸ் அதிக தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி... இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
எப்போதும் பொலிவான சருமம் வேண்டுமா? அப்ப நைட் நிம்மதியா தூங்குங்க...
நீங்கள் குட்டித் தூக்கம் போட்டால் கூட சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குட்டித் தூக்கம் என்பது இயற்கையின் மிகவும் சக்தி வாய்ந்த அழகு சிகிச்சையாகும். வழக்கமாக தூங்குவதைப் போல 7 முதல் 9 மணி நேரம் தூங்கினால் ஒளி பொருந்தியவராக நீங்கள் தோற்றமளிப்பீர்கள்.
ஆனால், பல நேரங்களில் முடி, முகம் மற்றும் உடலின் இதர பாகங்கள் இரவு நேரங்களில் ஓய்வெடுக்கும் போது, செல்கள் மற்றும் இரத்த ஓட்டமானது நன்றாக ஊடுருவி செல்வதால், உடலானது மிகவும் ஆற்றலுடன் இருக்கும். எனவே, எப்போதும் படுக்கையில் நிறைய நேரம் செலவிட்டு, எழும் போது பலன்களுடன் எழ வேண்டுமானால், இரவில் தூங்கும் போது நல்ல தூக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இதுப்போன்று வேறு: இந்திய பெண்களின் டாப் 10 அழகு இரகசியங்கள்!
அப்படி நல்ல நிம்மதியான தூக்கத்தைக் கடைப்பிடித்தால், உடல் மற்றும் சருமமானது அழகாக ஜொலிப்பதுடன், எப்போதும் புத்துணர்வுடன் காட்சியளிக்கும். குறிப்பாக கருவளையம், சோர்வான சருமம் போன்றவை எதுவும் இருக்காது. இங்கு இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி, எப்போதும் அழகாகவும், இளமையுடனும் ஜொலிக்க ஆரம்பியுங்கள்.

7 மணிநேர தூக்கம் அவசியம்
யாராக இருந்தாலும் ஒரு நாளுக்கு குறிப்பிடத்தக்க நேரம் உறங்க வேண்டியது அவசியம். இதை தினமும் நேரம் தவறாமல் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை செய்து வர வேண்டும். ஒரு நாளுக்கு குறைந்தது 7 மணி நேரம் தூங்குவது நல்லது.
வார இறுதி நாட்களில் அதிகமாக தூங்குவதன் மூலம் வார நாட்களில் தவற விட்ட தூக்கத்தை ஈடு செய்ய முடியாது. அதனால் ஏற்பட்ட சேதத்தை தடுக்க முடியாது, மதிய வேளை உறக்கங்களாலும் இதை சரி செய்ய முடியாது. மதிய வேளையின் உறக்கத்தை மாலை 4 மணியளவில் கலைத்து விட்டால், அதனால் இரவு உறக்கம் பாதிக்கப்படாது.

மனதை அமைதியாக வைக்கவும்
மனதை அமைதியாக வைத்திருங்கள். வாழ்க்கையின் முக்கியமான முடிவுகள் மற்றும் ஆராய்ச்சிகள் அனைத்தும் அடுத்த நாள் காலை வரையிலும் பொறுத்திருக்கட்டும். தூங்குவதற்கு முந்தைய நேரத்தை மன அழுத்தம் தரும் விஷயங்களில் செலவிட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அடுத்த நாள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகள் அனைத்தையும், ஒரு துண்டு காகிதத்தில் எழுதி வைத்துவிட்டு, மனதை அமைதியாக வைத்துக் கொண்டு தூங்குங்கள்.

குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுக்கவும்
நீங்கள் தூங்குவதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தொலைக்காட்சியை பத்து மணிக்கு அணைத்து வித்து விடுங்கள். எவ்வளவு தான் தூண்டினாலும், குறுந்தகவல்கள் அனுப்புவதை தவிர்க்கவும். அனைத்துக்கும் பிரேக் போட்டால் தான் மனதும் ஸ்விட்ச் ஆஃப் ஆகும். மனதுக்கும் தேவை ஒரு பிரேக். காப்ஃபைன், ஆல்கஹால் மற்றும் நிக்கோடின் ஆகியவை இரவில் கிடைக்கும் ஓய்வை சீர்குலைக்கும் தன்மை கொண்டவையாகும். நீங்கள் அவற்றை சாப்பிடுபவர்கள் என்றால், குறைந்தது ஒன்றரை மணி நேர இடைவெளியாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உடலுக்கு இதமான வேலைகள்
வெந்நீரில் குளித்தல், பாதங்களை நனைய விடுதல் மற்றும் உங்களுடைய தொடு உணர்வுக்கு மென்மையாக்கும் வேலைகள் போன்றவற்றை செய்து வாருங்கள்.

உடற்பயிற்சி செய்யவும்
இவையனைத்தும் தோல்வியடைந்து, இன்னும் உங்களுக்கு தூக்கம் வரவில்லையென்றால், உங்களுடைய தினசரி அட்டவணையில் உடற்பயிற்சியை சேர்த்துக் கொள்ளுங்கள். ஜாக்கிங், யோகாசனம், நடனம் அல்லது இசை போன்றவை மிகவும் பலனுள்ள பயிற்சிகளாக இருக்கும்.

நேராக படுக்கவும்
முதுகை தரையில் வைத்து உறங்கத் தொடங்கினால், முகம் எதிலும் புதைந்து போவது தடுக்கப்படும். பழக்கத்தின் காரணமாக இதை கடைபிடிக்க முடியாதவர்கள், போர்வைகள் மற்றும் தலையணைகளுக்கு பட்டு துணிகளால் சுற்றி வைத்து துணைக்கு வைத்துக் கொள்ளுங்கள். பட்டு துணிக்கு குளுமை மற்றும் வெப்பத்தை தக்க வைக்கும் குணம் உள்ளது மற்றும் இதன் மூலம் வெளியில் குளிராக இருக்கும் போது உங்களுக்கு கதகதப்பூட்ட பட்டு துணிகள் உதவும். இதன் மூலம் ஓய்வை உறுதிப்படுத்தும் சுகமாக தூக்கம் கிடைக்கும்.

நொறுக்கு தீனிகளைத் தவிர்க்கவும்
படுக்கைக்கு செல்லும் முன்னர் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். குறிப்பாக சர்க்கரை மற்றும் தானிய தீனிகள். இவை இரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் உங்களுடைய தூக்கம் கெடும். இவை உங்களுடைய செரிமாண உறுப்புகளை சுறுசுறுப்பாக வைத்து, உங்களுடைய தூக்கத்திற்கு உலை வைக்கின்றன.

அலார சப்தத்தை குறைவாக வைக்கவும்
தூங்கி எழுவதற்கு அலாரம் வைத்திருந்தால் அதன் சத்தத்தை குறைத்து வையுங்கள். ஊங்களை எழுப்புவதற்கு கடிகாரம் தேவை என்று நீங்கள் நினைத்தால் மென்மையான இசையை தேர்ந்தெடுத்து அலார ஒலியாக வையுங்கள். அது உங்களை எழுப்பும் அளவிற்கு ஒலி கொடுக்கக் கூடியதாக இருந்தால் போதும்!

நல்ல புத்தகங்களை படிக்கவும்
நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன் படிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், அந்த புத்தகம் மகிழ்ச்சியூட்டக் கூடியதாகவும், மெதுவாக நகர்ந்து செல்லும் கருவை கொண்டதாகவும் இருக்கட்டும். மர்ம நாவல்கள் அல்லது மாயஜாலக் கதைகள் போன்ற அதிகமான சுறுசுறுப்புடைய கதைகளை கொண்ட புத்தகங்களை படிக்க வேண்டாம்.

இருட்டில் தூங்கவும்
முழுமையான இருட்டில் தூங்கச் செல்வது நல்லதாகும். ஆனால் நீங்கள் சுறுசுறுப்பான நகரப் பகுதியில் வசிப்பவராக இருந்தால், திரைச்சீலைகள் மற்றும் மறைப்புகளை பயன்படுத்தி இருள் சூழ வையுங்கள். இது போன்ற விஷயஙக்ளில், ஐ-மாஸ்க் போட்டுக் கொண்டால் அதிகமாக இருக்கும் ஒளி உங்கள் தூக்கத்தை தொந்தரவு செய்யாது.



Click it and Unblock the Notifications











