Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
முழங்கை கருப்பாக இருக்கிறதா? இதை படிங்க...

முழங்கை கருப்பை நீக்க சில வழிகள்...
1. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் மூன்று கறிவேப்பிலையை அரைத்து தண்ணீர் விட்டு பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரால் அதனை துடைத்து எடுத்து விட வேண்டும். இதனை தினமும் குளிப்பதற்கு முன் செய்தால், அங்கு இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.
2. 100 கிராம் காய்ந்த துளசி இலையை பொடி செய்து, அத்துடன் 1 ஸ்பூன் வேப்ப எண்ணெய், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் அரைத்த புதினா இலை சேர்த்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் காட்டனால் துடைத்து விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
3. முழங்கையில் இருக்கும் கருப்பை நீக்க சிறந்த ஒரு வழி, ஒரு வாலி தண்ணீரில் சிறிது சோள மாவை கரைத்து, பின் கையை ஊற வைத்து கழுவினால், கருப்பு நீங்கிவிடும்.
4. தினமும் கடுகு எண்ணெய் வைத்து 10 நிமிடம் முழங்கையில் மசாஜ் செய்து, பின் அந்த இடத்தை காட்டனால் துடைத்து எடுக்கவும். இவ்வாறு செய்தால் அந்த இடத்தில் உள்ள அழுக்கானது போய்விடும்.
5. ஒரு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் வினிகரை விட்டு, முழங்கையில் தடவி, தினமும் 10 நிமிடம் மசாஜ் செய்யலாம்.
6. எலுமிச்சை பழத்தை நறுக்கி அதில் உப்பை தடவி, முழங்கையில் 5 நிமிடம் தேய்த்து வரவும். இதனை தினமும் செய்தால் சிறிது நாட்களில் முழங்கையில் இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.
7. தேங்காய் எண்ணெயுடன் சிறிது தேனை விட்டு, எலுமிச்சை தோல் வைத்து முழங்கையில் மசாஜ் செய்து, பின் காட்டனால் துடைத்து எடுக்கவும். இதனால் அந்த இடத்தில் இருக்கும் அழுக்கானது நீங்கிவிடும்.
இத்தகைய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முழங்கையில் இருக்கும் அழுக்குகளை நீங்கி முழங்கையை அழகாக வைத்துக் கொள்ளலாம். மேலும் மேற்கூறிய அனைத்தையும் முழுங்கைக்கு மட்டும் பயன்படுத்தாமல், கழுத்து, கணுக்கால் போன்ற இடங்களிலும் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications
