Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
ஒளிபடைத்த கண்கள் வேண்டுமா?

பளபளக்கும் கண்களுக்கு
ரோஸ் வாட்டரை பிரிஜ்ஜில் வைக்கவும். அவ்வப்போது சிறிதளவு பஞ்சில் நனைத்து ரோஸ் வாட்டரில் நனைந்தெடுத்து, மூடிய கண்கள் மீது பத்து நிமிடம் வைத்திருங்கள், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதே மாதிரி வெள்ளரிக்காய் சாறு, உருளைக்கிழங்குச் சாறு ஆகியவற்றையும் உபயோகப்படுத்தலாம். கண்கள் ஒளி பொருந்தியதாய் மாறும்.
சிறிதளவு ரோஸ் வாட்டரில் இரண்டு துளி விளக்கெண்ணெய் விடவும். கண்களை மூடிக்கொண்டு கண்களைச் சுற்றி பூசவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை அமைதியாக கண்களை மூடி படுத்திருக்கவும். பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவ கண்கள் குளிர்ச்சியடையும். பளபளப்பாகவும் மாறும்.
ஒரு ஸ்பூன் நெல்லிக்கனி பவுடலை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சிறிதளவு தண்ணீரில் கரைத்து அதனை கண்களை மூடிய வாறு சுற்றி கழுவவும் கண்கள் புத்துணர்ச்சி அடையும்.
மாஸ்க் போடவேண்டாம்
முகத்துக்கு 'மாஸ்க்' போடும் போது கண்களை சுற்றி எதுவும் போடக்கூடாது, அடர்த்தியான க்ரீம் எதையும் கண்களுக்கு அடியில் பூசக்கூடாது. மசாஜ் செய்வதும் கூடாது. பாதாம் பருப்பில் பால் விட்டு மையாக அரைத்து அதை கண்களுக்கடியில் பூசி பத்து நிமிடத்துக்குப் பிறகு ஈரமான பஞ்சினால் துடைக்கவும்.
வைட்டமின் சத்து
தினசரி உணவில் வைட்டமின் ஏ சத்து சரியான அளவு இருக்க வேண்டும். முட்டையின் மஞ்சள் மற்றும் பச்சைநிற காய்கறிகள், கேரட் ஆகியவற்றில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது தவிர, பச்சைக் காய்கறி மற்றும் பழங்கள் அடங்கிய சாலட் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 5 டம்ளர் குடித்தால்தான் கண்களுக்கு அடியில் பை மாதிரி சதை தொய்ந்து போகாமல் இருக்கும்.
தூக்கம் கெடவேண்டாம்
இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருந்து தொலைக்காட்சி பார்ப்பதோ, கணினியில் உட்கார்ந்திருப்பதோ கண்களை சோர்வடையச் செய்யும். எனவே நேரத்தோடு படுக்கச் சென்று விடியற் காலையில் எழுந்திருப்பதால் கண்கள் களைப்பின்றிச் சுறுசுறுப்பாக இருக்கும். கண்களுக்கு அடியில் கருவளையம் ஏற்படாமல் தடுக்கவும் செய்யலாம்.
மேக்கப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்கள். புது மேக்கப் பொருளை உபயோகிக்கும்போது, கண்களில் எரிச்சல் ஏற்பட்டாலோ கண்கள் சிவந்து போனாலோ அதை உபயோகிக்காதீர்கள். அப்படி அலர்ஜியாகிவிட்டால் சுயசிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக கண் மருத்துவரிடம் செல்லுங்கள்.
வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதை முடிந்தவரை தவிர்க்கலாம். அப்படியே போவதானாலும் கூலிங்கிளாஸ் அணிவது சிறப்பு. ஆனால் அவை தரமான கண்ணாடியாக இருக்க வேண்டும்.
சில சமயம் கண்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததாலும் கண்கள் களைப்புறும். அப்படிப் பட்ட சமயங்களில் மூச்சை நன்றாக இழுத்துவிடுவது நல்ல பலன் தரும். அப்புறம் என்ன உங்கள் கண்களும் ஒளி பொருந்தியதாய் மாறுமே.



Click it and Unblock the Notifications