Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
குளிச்ச பிறகும் உங்க அக்குள் 'கப்பு' அடிக்குதா? அப்ப இத தினமும் அக்குள்-ல தடவி 5 நிமிடம் ஊற வையுங்க...
Body Care Tips In Tamil: நாம் அனைவருமே நல்ல நறுமணத்துடன் இருக்க வேண்டுமென விரும்புவோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் பலவிதமான ஃபெர்ப்யூம்கள் மற்றும் டியோடரண்ட்டுகளை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே நிலைத்திருக்கும். அதன் பின் மீண்டும் உடல் துர்நாற்றம் வீசத் தொடங்கும்.
ஒருவருக்கு அக்குள் துர்நாற்றம் அதிகம் வீசுவதற்கு காரணம் வியர்வை தான். என்ன வியர்வைக்கு மணம் ஏதும் இல்லாவிட்டாலும், அந்த வியர்வை நீரானது உடலில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களுடன் சேர்ந்து பாக்டீரியாக்களை வளர்ச்சியடைய செய்து, துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன.

வியர்வையால் வீசும் துர்நாற்றமானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு குளித்தால் அக்குள் துர்நாற்றம் நீங்கும். ஆனால் இன்னும் சிலருக்கு என்ன தான் குளித்தாலும் அக்குள் துர்நாற்றம் வீசும்.
இப்படி வீசும் அக்குள் துர்நாற்றத்தைப் போக்க ஒருசில பொருட்கள் நம் வீட்டிலேயே உள்ளது. அந்த பொருட்களைப் பயன்படுத்தினால், பெர்ஃப்யூம் பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது. இப்போது அக்குள் துர்நாற்றத்தைப் போக்க எந்த பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
1. ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் பண்புகள், துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே அந்த ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சுருண்டையில் நனைத்து, குளித்து முடித்ததும் அக்குள் பகுதியில் தடவி உலர வைக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஆப்பிள் சீடர் வினிகரை டியோடரண்ட்டாக பயன்படுத்த நினைத்தால், ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அதை ஒவ்வொரு நாளும் குளித்து முடித்த பின் அக்குள் பகுதியில் ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
2. எலுமிச்சை சாறு
ஆப்பிள் சீடர் வினிகரைப் போன்றே எலுமிச்சையும் அசிட்டிக் பண்புகளைக் கொண்டது. சொல்லப்போனால் ஆப்பிள் சீடர் வினிகரை விட அதிகளவு அசிட்டிக் எலுமிச்சையில் உள்ளது. அப்படிப்பட்ட எலுமிச்சையின் ஒரு துண்டை எடுத்து, அதை துர்நாற்றம் வீசும் அக்குள் பகுதியில் தடவி சில நிமிடங்கள் உலர வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.
அதுவும் இப்படி தினமும் குளிப்பதற்கு முன் செய்வது இன்னமும் நல்லது. ஆனால் சென்சிட்டிவ் சருமத்தைக் கொண்டவர்கள், எலுமிச்சையை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தாமல், நீரில் கலந்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
3. லாவெண்டர் எண்ணெய்
லாலெண்டர் எண்ணெய் நல்ல மணத்தை கொண்டதோடு மட்டுமின்றி, துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவும் செய்யும். அதற்கு ஒரு பௌலில் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 3 டீஸ்பூன் சோள மாவை சேர்த்து கலந்து, அத்துடன் லாலெண்டர் எண்ணெயை 8-10 துளிகள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், அக்குள் துர்நாற்றம் மட்டுமின்றி, அக்குளில் உள்ள கருமையும் நீங்கும்.
4. ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் நல்ல மணத்தைக் கொண்டதோடு, வியர்வை சுரப்பைக் கட்டுப்படுத்தும். அப்படிப்பட்ட ரோஸ் வாட்டரை தினமும் அக்குள் பகுதியில் தடவி வந்தால், அக்குள் துர்நாற்றத்தைத் தடுக்கலாம். அதுவும ரோஸ் வாட்டர் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை சரிசம அளவில் எடுத்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, தினமும் குளித்து முடித்ததும், அதை அக்குளில் ஸ்ப்ரே செய்தால், அக்குள் நாற்றத்தைத் தடுக்கலாம்.
5. கற்றாழை ஜெல்
பெரும்பாலானோரின் வீடுகளில் கற்றாழை வளர்க்கப்பட்டு வருகிறது. கற்றாழையானது வெறும் அழகூட்டும் செடி மட்டுமல்ல, ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்ட செடியும் கூட. அக்குள் துர்நாற்றத்தை சந்திப்பவர்கள், இந்த கற்றாழையின் ஜெல்லை அக்குளில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவினால், அக்குள் நாற்றத்தைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications