Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
ஆண்களே! தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த எளிய இயற்கை வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
Beard Growth Tips In Tamil: ஆண்களுக்கு அழகே அவர்களின் தாடி தான். சொல்லப்போனால் தாடி ஒரு ஆணுக்கு நல்ல முதிர்ச்சியான, ஸ்டைலான தோற்றத்தைத் தரும். ஆனால் சில ஆண்களுக்கு தாடி வளர்ச்சி குறைவாகவோ அல்லது திட்டு திட்டாக ஆங்காங்கு தாடி வளர்ந்திருக்கும். இப்படியான ஆண்கள் சற்று கவர்ச்சி குறைவாக காணப்படுவதோடு மட்டுமின்றி, இது அந்த ஆண்களின் சுயமரியாதையையும் பாதிக்கும்.
இந்நிலையில் இந்த பிரச்சனையை கொண்ட ஆண்கள் தங்களின் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த பொருட்கள் சில சமயங்களில் எதிர்பார்த்த பலனை தந்திருக்காது.

ஆனால் ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, தாடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளரும். இப்போது தாடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
1. தேங்காய் எண்ணெய் மசாஜ்
* தாடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமானால் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்கள். அதுவும் அந்த தேங்காய் எண்ணெயுடன் ரோஸ்மேரி எண்ணெயை சேர்த்து கலந்து, அதைக் கொண்டும் மசாஜ் செய்யலாம். ஒருவேளை ரோஸ்மேரி எண்ணெய் இல்லாவிட்டால், வெறும் தேங்காய் எண்ணெயை கொண்டும் மசாஜ் செய்யலாம்.
* இன்னும் சிறப்பான பலனைப் பெற விரும்பினால், தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பஞ்சுருண்டையில் நனைத்து தடவி, குறைந்தது 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், சிறந்த பலனைப் பெறலாம்.
2. பட்டை எலுமிச்சை கலவை
* எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம், கால்சியம், வைட்டமின் சி போன்றவை உள்ளன. இவை தாடியில் பொடுகு வருவதைக் குறைக்கும் மற்றும் பட்ட்டை மயிர்கால்களுக்கு சத்து நிறைந்த இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து பயன்படுத்தும் போது தாடி வேகமாக வளரும்.
* அதற்கு ஒரு பௌலில் பட்டை தூளை எடுத்து, எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து, தாடி வளரும் இடத்தில் தடவி குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், தாடியில் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.
3. யூகலிப்டஸ் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் கலவை
* தேங்காய் எண்ணெயைப் போன்றே யூகலிப்டஸ் எண்ணெயும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும். ஆனால் இதில் உள்ள சக்தி வாய்ந்த பொருட்களால், இது சருமத்தில் எரிச்சலை உண்டாக்கலாம். எனவே இந்த யூகலிப்டஸ் எண்ணெயை தனியே பயன்படுத்தாமல், அத்துடன் வேறு ஏதாவது ஒரு எண்ணெயை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
* அதுவும் நல்லெண்ணெயுடன், சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை சேர்த்து கலந்து, அதை தாடி வளரும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்.
4. வெங்காய ஜூஸ்
* வெங்காய ஜூஸ் தாடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் சிறந்தது. இதற்கு அதில் உள்ள அல்லிசின் தான் காரணம். இந்த அல்லிசின் செல் மீளுருவாக்கத்திற்கு உதவுகிறது. அதாவது இது வழக்கத்தை விட வேகமாகவும் அடர்த்தியாகவும் முடி வளர உதவும்.
* அதற்கு வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை தாடி வளரும் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்.
5. பூண்டு ஜூஸ்
* தாடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் பூண்டு பெரிதும் உதவுகிறது. இதற்கும் பூண்டில் உள்ள அல்லிசின் தான் காரணம். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களை வலுவடையச் செய்வதோடு, முடியின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
* இப்படிப்பட்ட பூண்டு பற்களை அரைத்து சாறு எடுத்து, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து 1:2 என்ற விகிதத்தில் கலந்து, தாடி வளரும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் 15 நிமிடம் ஊற வைத்து, மைல்டு சோப்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
