Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
ஃபேஸ் வாஷ் செய்யும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!!!
இன்றைய சூழ்நிலையில் ஃபேஷ் வாஷ் என்றால் பிறந்த குழந்தைக்குக் கூட தெரியும். உங்கள் சருமப் பாதுகாப்பில் முகத்தை சுத்தம் செய்வது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆனால் சில சமயம் இதனைச் செய்யும் போது சில தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது.
ஃபேஸ் வாஷ் செய்யும் போது சரியான முறைகளைப் பின்பற்றவில்லையென்றால் விளைவுகள் எதிர்மறையாக மாறலாம். இதுப்போன்ற தவறுகளைத் தவிர்ப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

முகத்துடைப்புகள்
ஃபேஷியல் வைப்ஸ் எனப்படும் முகத்தைத் துடைக்கும் முறை நல்ல மற்றும் உபயோகமான ஒன்று. ஆனால் அடிக்கடி துடைப்பது அல்லது மிக அதிகமாகத் துடைப்பது, சருமத்தின் மெல்லிய அடுக்குகளை பாதிப்பதோடு. உங்களுடைய சருமத்தை மாசு மற்றும் சூரியக் கதிர்கள் உள்ள பாதுகாப்பற்ற நிலையில் விட்டுவிடும். எனவே ஒரு நாளைக்கு இருமுறைக்கு மேல் முகத்தைத் துடைக்க வேண்டாம் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். தேவைப்பட்டால் முதத்தை நல்ல தண்ணீர் மற்றும் ஒரு நல்ல ஃபேஸ் வாஷைக் கொண்டு கழுவலாம்.

இதமான சுடுநீர்
மிகவும் சூடான நீராலோ அல்லது மிகவும் குளிர்ந்த நீராலோ முகத்தை கழுவ வேண்டாம். ஆனால் வெதுவெதுப்பான நீர் சருமத்தை எந்தவித பாதிப்புமின்றி கழுவ ஏற்றது.

ஒவரா பண்ணாதீங்க
சிலர் எப்போது பார்த்தாலும் முகத்தை தேய்த்துக் கொண்டோ அல்லது கழுவிக் கொண்டோ இருப்பார்கள். இதனால் முகத்திலுள்ள அழுக்கு போய்விடும் என்று நினைப்பார்கள் ஆனால் அது தவறு. உண்மையில் இதில் நன்மையை விட தீமையே அதிகம். இவ்வாறு செய்வது முகச் சருமத்திலுள்ள மென்மையான அடுக்குகளை பாழாக்கி சருமத்தை இறுகச் செய்துவிடும். நன்றாகச் சுத்தம் செய்யுங்கள் ஆனால் ஓவராக வேண்டாமே!

வறண்ட சருமப் பகுதிகளை நீக்குதல்
எக்ஸ்ஃபோலியேஷன் எனப்படும் இந்த முறையை பெரும்பாலானோர் கவனிக்கத் தவறுவர். சிலர் மிகவும் அதிகமாக அழுத்திச் செய்து முக சருமத்தை எரிச்சலுக்கு உள்ளாக்குவார்கள் அல்லது சிலர் முகத்தைத் தொடவே மாட்டார்கள். இதன் மூலம் முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் சில சருமப் பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள்.

மேக்கப்பை கண்டிப்பா களையுங்க
இந்த விஷயம் பல காலமாகக் கூறப்பட்டு வந்தாலும், மக்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. நாளின் இறுதியில் மேக்கப்பை களைவது நமது தேர்வல்ல - கட்டாயமான ஒன்று. உங்கள் சருமம் மூச்சு விடுவதையும், அதை நீங்கள் போட்ட மேக்கப் மறைத்து காற்றைப் புக விடாமல் அது திணறுவது போலவும் நினைத்துப் பாருங்கள். அப்போது உங்களுக்கு இதன் முக்கியத்துவம் புரியும்.
எனவே மேற்கூறிய உக்திகளை பின்பற்றி புத்துணர்ச்சியான, மென்மையான மற்றும் தூய சருமத்தைப் பாதுகாக்கத் தவறமாட்டீர்கள் தானே !



Click it and Unblock the Notifications