Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா?
இந்த 4 ராசிக்காரங்களோட எதிரியாவது உங்களை ஆபத்தில் தள்ளுமாம்... ரொம்ப ரொம்ப மோசமானவங்க இவங்க...!
ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன மற்றும் ஒவ்வொரு ராசிக்கும் அவர்களுக்கென சொந்த தனித்தன்மை உள்ளது. ராசிகளை அவர்களின் பஞ்ச பூதங்கள், குணநலன்கள், ராசியின் அதிபதி போன்றவற்றைப் பொறுத்து அறியலாம்.
ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் அவர்களுக்கென ஒரு தனித்துவமான குணங்கள் இருக்கும். முழு ஆளுமையையும் மதிப்பிடுவதற்கு அவர்களின் ஜாதகத்தின் லக்ன நிலை அவசியம் என்றாலும், அவர்களின் ராசிதான் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நிர்ணயிக்கும் அடிப்படை விஷயமாக இருக்கிறது.

இதன் அடிப்படையில் சில ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள். அவர்களுடன் பகை கொள்வது என்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுடன் எதிரியாக இருப்பது உங்களுக்கு அதிக ஆபத்துக்களையும், நஷ்டத்தையும் ஏற்படுத்துவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியின் ஆளும் கடவுள் போரின் கடவுளான செவ்வாய். மற்ற ராசிக்கார்களை விட இவர்களுக்கு ஈகோ மிகவும் அதிகம். அவர்கள் நல்ல நண்பர்களாக இருந்தாலும், அவர்களுடன் யாராவது உரசினால், அவர்கள் மிகவும் மோசமாக பழிவாங்குவார்கள். அவர்கள் தங்கள் ஈகோ தோற்பதைப் பார்க்க விரும்புவதில்லை, எனவே அவர்கள் எதிரியை அழிக்க மிகவும் கடினமாக முயற்சி செய்கிறார்கள்.
மன்னிக்கும் குணம் இந்த ராசிக்காரர்களிடம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. அதனால்தான் ஒருவருடன் பகை ஏற்பட்டால், அவர்களை மன்னிப்பதோ அல்லது அவர்களுடன் நட்பாக இருப்பதோ இவர்களால் இயலாத ஒன்றாகும். அவர்கள் ஒருவரைப் பற்றி தவறாக முடிவெடுத்துவிட்டால் அதை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் ஆற்றல் மிக்கவர்களாகவும், பிரகாசமானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அவர்கள் மிகவும் கலகலப்பானவர்கள் மற்றும் எல்லோரிடமும் நன்றாக பழக முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், அவர்கள் யாருடைய அழுத்தத்திலும் இருக்க விரும்ப மாட்டார்கள். இந்த ராசிக்காரர்களுடன் யாராவது பகைமை கொண்டால், அவர்களின் மொத்த கோபத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும், மேலும் அவர்கள் தங்கள் எதிரியை வீழ்த்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.
இந்த ராசிக்காரர்கள் உறங்கும் சிங்கத்தைப் போல அமைதியாக இருந்தாலும், அவர்களுடன் பகை ஏற்படும் போது, எதிரியை வெல்ல அவர்கள் தங்கள் சொந்த நன்மை தீமைகளைப் பற்றி துளியும் சிந்திக்க மாட்டார்கள். தங்களுக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டுமென்று நினைப்பார்கள். அதனால் அவர்களுக்குள் பகை இல்லாமல் இருந்தால் நல்லது.
விருச்சிகம்
பகை என்று வரும்போது அதில் செவ்வாயால் ஆளப்படுபவர்களே ஆபத்தானவர்கள். இந்த ராசி நீர் சார்ந்தது என்பதால் யாருடனும் தேவையில்லாமல் சண்டை போடுவதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் யாரிடமாவது பகை கொண்டால், எதிரியை முழுவதுமாக தங்கள் காலில் விழச் செய்வது பற்றி அவர்கள் திட்டமிடத் தொடங்குகிறார்கள். அவர்கள் எதிரிகளை அழிப்பதை விட அவர்களை ஜெயிப்பதற்கும், அவமப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
பல சமயங்களில் எதிரிகளை தலைகுனிய வைப்பதே அவர்களின் இலக்காக இருக்கும். இவர்களின் ராசியின் சின்னம் தேள், தேள் போன்ற குணங்களும் இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும். எதிரிகளை பழிவாங்கும் வரை அவர்களுக்குள் அமைதியின்மை இருந்து கொண்டே இருக்கும். எதிரிகளின் தொல்லைகளுக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள், எனவே இந்த ராசிக்காரர்களுடன் குழப்பமடையாமல் இருப்பது நல்லது.
மகரம்
இந்த ராசிக்காரர்கள் வெளித்தோற்றத்திற்கு மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் வேலையைத் தவிர வேறு எதையும் விரும்புவதில்லை. அவரது வாழ்க்கையை சமநிலைப்படுத்த, அவர்கள் வாழ்க்கையை மிகவும் சிந்தனையுடன் திட்டமிட்டு வாழ விரும்புகிறார்கள். இருப்பினும், யாராவது அவர்களுக்கோ அல்லது அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு தீங்கு செய்ய முயற்சிக்கும்போது, அவர்கள் மிகவும் கோபம் கொள்கிறார்கள்.
ஒருவரைப் பழிவாங்கும் உணர்வு அவர்களின் மனதில் எழுந்து விட்டால், ஒன்று இவர்களின் எதிரி இறக்க வேண்டும் அல்லது இவர்கள் இறக்க வேண்டும். சனியின் தாக்கத்தால் ஒருவரைப் பற்றி அவர்கள் தவறாக நினைத்து விட்டால், அதை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். வாய்ப்பு வரும்போது, அவர்கள் தங்கள் எதிரிகளை இரக்கமே இல்லாமல் மோசமாக பழிவாங்குகிறார்கள். எதிரியை பழிவாங்கிய பின்னரே அவர்களுக்கு அமைதி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

