Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
இந்த 4 ராசி பெண்கள் வலிமையான அம்மாவாக குழந்தையை பொறுப்பாக வளர்ப்பார்களாம்..உங்க ராசி இதுல இருக்கா?
குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சிக்கலான ஒன்றாகும், இது நபருக்கு நபர் மாறுபடும். சிலர் மிகவும் நட்பான, அன்பான பெற்றோராக இருப்பார்கள். சிலர் மிகவும் கண்டிப்பான பெற்றோராக இருப்பார்கள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர் இருவரின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், அம்மாவின் பங்கு ஒரு படி மேலே இருக்கும்.
ஒருவர் எப்படிப்பட்ட அம்மாவாக இருப்பார்கள் என்பதை அவர்களின் ராசியை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி சில ராசிகளில் பிறந்த பெண்கள் மிகவும் கண்டிப்பான மற்றும் ஒழுக்கத்தை வலியுறுத்தும் அம்மாவாக இருப்பார்கள்.

அவர்கள் தங்கள் குழந்தையின் மீது அன்பும், அக்கறையும் கொண்டிருந்தாலும் அனைத்தையும் விட அவர்களை ஒழுக்கமாக வளர்க்க கடுமையாக நடந்து கொள்வார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி பெண்கள் மிகவும் கண்டிப்பான அம்மாவாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள், இயற்கையாகவே தலைவருக்குரிய குணத்துடன் பிறந்தவர்கள். தங்கள் குழந்தைகளிடம் ஒழுக்கத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வர வேண்டும் என்ற விருப்பத்தில்தான் அவர்கள் கண்டிப்பான அம்மாவாக மாறுகிறார்கள்.
மேஷ ராசி பெண்கள் வாழ்க்கையில் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை நம்புகிறார்கள், வாழ்க்கையின் சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள தங்கள் குழந்தைகளை வழிநடத்துகிறார்கள். அவர்களின் கண்டிப்பான நடத்தை கடுமையானது என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டாலும், உண்மையில், அது அவர்களின் குழந்தையின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான உந்துதலாகும்.
மகரம்
சனிபகவானால் ஆளப்படும் மகர ராசி பெண்கள், ஒழுக்கமான மற்றும் பொறுப்பான தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களைப் பொறுத்தவரை, அம்மாவாக இருப்பது என்பது எதிர்காலத் தலைவரை உருவாக்கும் பொறுப்பான உறவாகும்.
அவர்களின் கண்டிப்பு ஆழமான பொறுப்புணர்வுடன் வேரூன்றியுள்ளது. அவர்கள் இந்த வஞ்சக உலகில் பாதுகாப்பாக வாழ தங்கள் குழந்தைகளைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்கள். மகர ராசி பெண்கள், கண்டிப்பான வளர்ப்புதான் வெற்றிக்கும், திருப்திக்கும் முக்கியம் என்று நம்புகிறார்கள்.
சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் மிகவும் கவனமாகவும், சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்படுவார்கள். ஒரு அம்மாவாக, அவர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் முழுமைக்காகவும், வெற்றிக்காகவும் பாடுபடுகிறார்கள்.
அவர்களின் கண்டிப்பு தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற உன்னதமான விருப்பத்திலிருந்து உந்தப்படுகிறது. கன்னி ராசி பெண்கள் தங்கள் குழந்தைகளை நல்ல குணங்கள் மற்றும் உறுதியான பணி நெறிமுறைகளுடன் வளர்ப்பதில் அவர்கள் உறுதியாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பார்கள், மேலும் அவர்களின் கண்டிப்பு அவர்களின் ஆழ்ந்த அன்பு மற்றும் அக்கறையின் வெளிப்பாடாகும். ஒரு அம்மாவாக அவர்கள் தீவிர ஆர்வத்துடன், தங்கள் குழந்தைகளை அனைத்து விதமான தீங்குகளிலிருந்து பாதுகாக்க விரும்புகிறார்கள்.
அவர்களின் அணுகுமுறைகள் கடுமையாகத் தோன்றினாலும், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்ற விருப்பத்தால் தூண்டப்படுகிறார்கள். இது அவர்களை கண்டிப்பான அம்மாவாக மாற்றுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
