Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
இந்த 4 ராசிக்காரங்க காதல் விஷயத்தில் ரொம்ப முட்டாளாக இருப்பார்களாம்... இவங்கள காதலிக்கிறவங்கதான் பாவம்...!
காதல் வாழ்க்கையில் நம்பிக்கையும், விசுவாசமும் எவ்வளவு முக்கியமோ அதேயளவிற்கு புத்திசாலித்தனமும் முக்கியம். ஏனெனில் புத்திசாலித்தனம் இல்லாத காதலில் வாக்குவாதங்கள் அதிகமாக இருக்கும் மற்றும் விரைவில் பிரிவு ஏற்படும். காதல் உறவுகளைப் பொறுத்தவரை அனைவரும் இயல்பாகவே புத்திசாலியாகவும், முதிர்ச்சியடைந்தவராகவும் இருப்பதில்லை.
சிலர் உணர்ச்சிகள் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார்கள், புத்திசாலித்தனம் இல்லாமல் முடிவுகளை எடுக்கிறார்கள் மேலும் மோதல்களை சரியாகக் கையாள மாட்டார்கள். இதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசி காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உண்மைதான் சில ராசிக்காரர்கள் காதலில் மிகவும் முட்டாள்த்தனமாக நடந்து கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் ஆர்வம் மற்றும் எல்லையில்லா ஆற்றலுக்கு பெயர் பெற்றவர்கள், ஆனால் உறவுகளில் அவர்களின் மனக்கிளர்ச்சி மற்றும் பிடிவாதம் சில சமயங்களில் அவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் மெச்சூரிட்டிக்கு இடையூறாக இருக்கும். அவர்கள் முதலில் ஒரு செயலை செய்துவிட்டு அதன்பின்னரே அதைப்பற்றி சிந்திக்கிறார்கள். இது தேவையற்ற வாக்குவாதங்கள், தவறான புரிதல்கள் மற்றும் புண்படுத்தும் உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
புத்திசாலித்தனமாக காதலிப்பதோ அல்லது பொறுமையாக காதலிப்பதோ அவர்களின் ஸ்டைல் அல்ல, மேலும் எதிர்வினையாற்றுவதற்கு முன்பு தங்கள் துணையின் உணர்ச்சிகளை ஒருபோதும் கருத்தில் கொள்வது இல்லை. அவர்களின் உற்சாகமும், நம்பிக்கையும் காதலில் சுவாரஸ்யமானதாக இருந்தாலும், செயல்படுவதற்கு முன்பு கேட்கவும், சிந்திக்கவும் கற்றுக்கொள்வது அவர்களுக்கு வலுவான மற்றும் மகிழ்ச்சியான காதல் உறவுகளை உருவாக்க உதவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வேடிக்கையானவர்கள், வசீகரமானவர்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள், ஆனால் காதலைப் பொறுத்தவரை, போதுமான மெச்சூரிட்டி மற்றும் விசுவாசம் இன்றி போராடலாம். காதலில் அவர்களின் மிகப்பெரிய சவாலாக இருப்பது அவர்கள் முடிவெடுக்க முடியாதவர்களாகவும், எளிதில் திசைதிருப்பப்படுபவர்களாகவும் இருப்பதுதான்.
அவர்கள் விரைவாக சலிப்படைகிறார்கள், மேலும் ஒரு உறவில் முழுமையாக முதலீடு செய்வது கடினமாக இருக்கலாம், பெரும்பாலும் தங்கள் துணையின் உணர்வுகளைப் பற்றி புத்திசாலித்தனமாக பற்றி சிந்திக்காமல் எளிதில் அவர்களை காயப்படுத்துவார்கள் அல்லது உறவிலிருந்து வெளியேறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தீராத கவனத்தையும், பாராட்டையும் விரும்புகிறார்கள், இது சில சமயங்களில் அவர்களின் உறவுகளில் புத்திசாலித்தனம் இல்லாமலும், சுயநலமாகவும் நடந்து கொள்ள வழிவகுக்கும். அவர்களுக்கு அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது, மேலும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதோ அல்லது தவறுகள் செய்தபோது ஒப்புக்கொள்வதோ அவர்களுக்கு தன்மான பிரச்சினையாக இருக்கலாம்.
பொறுமை மற்றும் புரிதலுடன் மோதல்களைக் கையாள்வதற்குப் பதிலாக, அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சுயநலமாக செயல்படலாம் அல்லது தங்கள் துணையின் மீது பழி சுமத்த முயற்சிக்கலாம். விஷயங்கள் அவர்கள் விருப்பப்படி நடக்காதபோது, முதிர்ச்சியுடன் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குப் பதிலாக அவர்கள் பிடிவாதமாகவோ அல்லது பொறுமையிழந்து சைக்கோ போலவோ மாறக்கூடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரம் மற்றும் சாகசத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள், ஆனால் காதலில் அர்ப்பணிப்பு குறித்த அவர்களின் பயம் அவர்களின் காதல் உறவுகளை கடினமாக்கும். அவர்கள் பெரும்பாலும் காதலில் தீவிரமாக இருப்பதை வெறுக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக உணர விரும்பவில்லை. இது அவர்கள் தங்கள் துணையின் உணர்வுகளுடன் சீரற்றவர்களாகவோ, நம்பகத்தன்மையற்றவர்களாகவோ அல்லது கவனக்குறைவாகவோ இருக்க வழிவகுக்கும்.
பிரச்சினைகளை நேரடியாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் கடினமான உரையாடல்களை முற்றிலுமாகத் தவிர்த்து, அந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முயலலாம். மற்றொரு சவால் அவர்களின் வெளிப்படையான நேர்மையின்மை. தனுசு ராசிக்காரர்கள் சில சமயங்களில் உறவுப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும்போது உணர்ச்சியற்றவர்களாகவோ அல்லது புறக்கணிப்பவராகவோ மாறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












