Latest Updates
-
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்..
இந்த 4 ராசிக்காரங்க கர்ணன் போல எதையும் எதிர்பாக்காம எல்லோருக்கும் உதவும் ஆன்மாக்களாம்..உங்க ராசி இதுல இருக்கா?
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு உதவுவது என்பது மனித வாழ்வின் அடிப்படை விதியாகும். இந்த விதி இப்போது மனிதர்களின் சுயநலத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. தற்போது வெகுசிலரே எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுபவர்களாக இருக்கிறார்கள்.
இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இந்த சுயநல உலகத்திலும் எந்த பாராட்டையும், அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவும் சில அதிசய ஆன்மாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த அபூர்வ குணம் இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவுபவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் உற்சாகமான மனப்பான்மைக்கும், துணிச்சலான செயல்களுக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்களின் தைரியத்தில் ஒரு உண்மை இருக்கும், மற்றவர்களுக்கு தேவைப்படும் போது அவர்களுக்கு உதவ எந்த ரிஸ்க்கும் எடுக்க தயங்க மாட்டார்கள்.
அவர்கள் ஒரு அநீதியைக் கண்டால், அவர்கள் துளியும் சிந்திக்காமல் தங்கள் நேரத்தையும், சக்தியையும் பணயம் வைத்து மற்றவர்களைப் பாதுகாக்க முயற்சிப்பார்கள். மற்றவர்களுக்கு உதவுவது அவர்களுக்கு உற்சாகத்தையும், மன நிம்மதியையும் கொடுக்கும். எனவே அவர்கள் எந்த எதிர்பார்ப்புமின்றி பிறருக்கு உதவ தயாராக இருப்பார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ராசி சக்கரத்தின் அக்கறையுள்ள ஆன்மாக்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் ஆழ்ந்த உள்ளுணர்வு மற்றும் வளர்ப்புத் திறன் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு தேவை இருக்கும் போது அதை அவர்கள் சொல்லாமலேயே உணரும் அசாத்தியமான திறன் கொண்டவர்கள். மற்றவர்கள் ஆபத்தில் இருக்கும் போது ஓடிச்சென்று உதவுவார்கள்.
அவர்களின் இந்த உதவும் குணம் அவர்களுடைய தன்னலமற்ற தன்மை, பச்சாதாபம் மற்றும் விசுவாசத்திலிருந்து உருவாகிறது. ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் துயரத்தில் இருக்கும்போது, அவர்களின் சுமையைக் குறைப்பதே அவர்களின் இயல்பாகும். நண்பர்கள் மட்டுமின்றி முன்பின் தெரியாதவர்களுக்கும் அவர்கள் உதவுவதை தங்கள் கடமையாக கருதுகிறார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அவர்களின் திறமைகாகவும், புத்திக்கூர்மைக்காகவும் பாராட்டப்படுபவராக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இன்னொரு முகம் இருக்கிறது, அது மற்றவர்களுக்கு எதிர்பார்ப்பின்றி உதவுவது ஆகும். தனிப்பட்ட நபர்களுக்கு உதவுவது மட்டுமின்றி சமூகத்திற்கும் தங்களால் முடிந்த சேவை செய்ய அவர்கள் முயலுவார்கள். அவர்களின் உதவியின் தனித்துவமே விளம்பரம் இல்லாமல் செய்வதுதான்.
கன்னி ராசிக்காரர்கள் பெறுவதை விட கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியே மற்றவர்களுக்கு சேவை செய்வதில் இருந்துதான் கிடைக்கிறது. அவர்கள் சொல்லி விட்டு உதவுவதை விட ரகசியமாக உதவுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அதை செயல்படுத்தவும் செய்கிறார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்லிணக்கத்தையும், சமநிலையையும் விரும்புகிறார்கள். அவர்களின் அமைதி காக்கும் தன்மைக்கு அப்பால், நியாயத்தில் வேரூன்றிய ஒரு தனித்துவமான தன்னலமற்ற தன்மையை அவர்கள் கொண்டுள்ளனர். அன்பு மற்றும் அழகுக்கான கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் அவர்கள் தங்கள் வாழ்க்கை மட்டுமின்றி தங்களை சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலும் அமைதியை உருவாக்க விரும்புபவர்கள், அனைவரும் இணைந்து வாழும் உலகத்தை உருவாக்க பாடுபடுகிறார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் நம்பமுடியாத அளவிற்கு வசீகரமானவர்கள் மற்றும் ராஜதந்திரவாதிகள், அதாவது அவர்கள் பதட்டமான சூழ்நிலைகளை கருணையுடன் கையாள முடியும். நண்பர்கள் சமரசம் செய்ய உதவுவது அல்லது ஒரு சமூக நோக்கத்துக்காக தன்னார்வத் தொண்டு செய்வது எதுவாக இருந்தாலும், அனைவரும் பார்க்கப்படுவதையும், கேட்பதையும் உறுதிசெய்ய துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் ஆதரவை வழங்க ஆர்வமாக உள்ளனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












