Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
இந்த 3 ராசிக்காரங்க சிறந்த நண்பராகவும், மோசமான எதிரியாகவும் இருக்கும் வினோத ஆன்மாக்களாக இருப்பார்களாம்...!
அனைவரின் வாழ்க்கையிலும் அவசியமாக இருக்கும் ஒரு உன்னதமான உறவுதான் நண்பர்கள். நண்பர்களுடன் பழகுவது என்பது சுவாரஸ்யமான பயணமாக இருக்கும், சில சமயங்களில் மோசமான அனுபவமாகவும் இருக்கும். சிலர் ஒரு நிமிடம் உங்களுக்கு நல்லது செய்யும் நெருங்கிய நண்பராக இருப்பார்கள், அடுத்த நிமிடமே உங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறுவார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் இந்த வினோதமான குணத்தைக் கொண்டவர்களாக இருப்பார்களாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஒரு நிமிடம் நண்பராகவும், ஒரு நிமிடம் எதிரியாகவும் இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இரட்டை இயல்புக்கும், பெரும்பாலும் கணிக்க முடியாத நடத்தைக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் பொழுதுபோக்கையும், வேடிக்கையையும் விரும்புபவர்கள். அவர்கள் இரட்டை ஆளுமை கொண்டவர்கள், இரண்டு வெவ்வேறு ஆளுமைகளுக்கு இடையே எப்போதும் ஒரு நிலையான மோதலைக் கொண்டிருக்கிறார்கள்.
மிதுன ராசிக்காரர்களுடன் நட்பு கொள்வது என்பது, ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு நண்பர்களுடன் பழகுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அவர்கள் வேடிக்கையான சாகசங்களுக்கும் ஆழமான உரையாடல்களுக்கும் உங்களுக்குப் பிடித்தமானவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்களின் மாறிவரும் இயல்பு தவறான புரிதல்களுக்கும் மோதல்களுக்கும் வழிவகுக்கும்.
அவர்களின் மகிழ்ச்சியான நாட்களில், மிதுன ராசிக்காரர்கள் உற்சாகமானவர்களாகவும், நல்ல நேரத்தை அனுபவிக்கத் தயாராகவும் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அடுத்த நாளே மனநிலை சரியில்லாதவர்களாகவும், அமைதியற்றவர்களாகவும், தவறான முடிவெடுப்பவராகவும் மாறலாம்.
கன்னி
அனைத்து விஷயங்களிலும் சரியானவர்களாக இருக்க விரும்பும் கன்னி ராசிக்காரர்கள் உங்கள் சிறந்த நண்பராகவும், அதேசமயம் மோசமான எதிரியாகவும் இருக்கக்கூடியவர்கள். கன்னி ராசிக்காரர்கள் கூர்மையான அறிவுத்திறன், தொலைநோக்குப்பார்வை மற்றும் ஆழ்ந்த பொறுப்புணர்வுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் பகுப்பாய்வு செய்யும் தன்மை அவர்களை சிறந்த பிரச்சனை தீர்க்கும் நபர்களாக ஆக்குகிறது.
அவர்களின் இந்த பகுப்பாய்வு குணம்தான் அவர்களை வினோதமான உயிரினமாக மாற்றுகிறது. கன்னி ராசிக்காரர்கள் தங்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் உயர்ந்த தரங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் அதிகமாக விமர்சிக்கக்கூடியவர்களாகவும், மற்றவர்கள் கவனிக்காமல் இருக்கக்கூடிய குறைபாடுகளை சுட்டிக்காட்டக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இது அவர்களை மிகவும் கடுமையானவர்களாக மாற்றும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சமாதானத்தை விரும்பும் அமைதியான ஆன்மாக்கள். அவர்கள் அனைத்து உறவுகளிலும் சமநிலையையும் நல்லிணக்கத்தையும் நாடுகிறார்கள், நியாயத்தையும் நீதியையும் கடைப்பிடிக்கும் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். துலாம் ராசிக்காரர்கள் நேசமானவர்கள், ராஜதந்திரமானவர்கள், மேலும் அனைவரையும் எளிதில் கவர்ந்திழுக்க முடியும். அனைவரும் ஒத்துப்போவதையும், ஒரு இனிமையான சூழ்நிலை நிலவுவதையும் உறுதிசெய்ய அவர்கள் தங்கள் வழியில் முயற்சி செய்வார்கள்.
சமநிலைக்கான அவர்களின் ஆசை சில நேரங்களில் அவர்களை அதிக சந்தேகத்திற்கு ஆளாக்கலாம். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு நன்மை தீமைகளை எடைபோடுவதில் அவர்கள் அதிக நேரம் செலவிடலாம், நீங்கள் விரைவான ஆலோசனை அல்லது உதவியை நாடும்போது இது வெறுப்பாக இருக்கலாம். துலாம் ராசி நண்பருடன் பழகுவதற்கு பொறுமையும், சமநிலைக்கான அவர்களின் தேவையைப் புரிந்துகொள்வதும் அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
