Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இந்த 3 ராசிக்காரங்க எப்போதும் நல்லவர் முகமூடி அணிந்திருக்கும் பச்சோந்திகளாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க!
உண்மையிலேயே நல்லவராக இருப்பதற்கும் நல்லவர்கள் போல காட்டிக்கொள்வதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. உண்மையான நல்லவர்கள் முகத்தில் எப்போதும் ஒரு சிறிய புன்னகை இருக்கும், எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் குணம் இருக்கும் மற்றும் வார்த்தைகளில் கனிவிருக்கும். ஆனால் சிலர் இந்த குணங்கள் இருப்பது போல் நடிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி நல்லவர்கள் போல நடிப்பதில் சில ராசிக்காரர்கள் நிபுணர்களாக இருப்பார்கள். அவர்கள் இயல்பாகவே கெட்டவர்கள் அல்ல ஆனால் மிகவும் நல்லவர்கள் போல எப்போதும் காட்டிக்கொள்வார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் நல்லவர்கள் போல நடிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களை வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர வைக்கும் திறனைக் கொண்டுள்ளனர். அவர்கள் எங்கு என்ன பேச வேண்டுமென்பதில் தெளிவாக இருப்பார்கள், இது மற்றவர்களால் அவர்களை எப்போதும் நல்லவர்களாக உணர வைக்கிறது. துலாம் ராசிக்காரர்கள் சமநிலையை பராமரிப்பதில் வல்லுநர்கள், மேலும் அவர்கள் மோதலை வெறுக்கிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் உண்மையான உணர்வுகளையோ, நோக்கங்களையோ மறைக்கிறார்கள், சூழலை எப்போதும் அமைதியாக வைத்திருக்க நல்லவர்கள் போல நடிக்கிறார்கள்.
துலாம் ராசிக்காரர்களின் புன்னகை மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருப்பது போலவே ராஜதந்திரத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். தந்திரமான சமூக சூழ்நிலைகளை சமாளிக்க அவர்கள் தங்கள் வசீகரத்தைப் பயன்படுத்துகிறார்கள், எல்லோரும் தங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயத்துடன் இருக்க வேண்டுமென்று அவர்கள் நடிக்கிறார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் உங்களைப் பாராட்டினாலோ அல்லது உங்கள் மீது கருணையுடன் இருந்தாலோ அது அவர்கள் இதயத்தில் இருந்து வந்தது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சிறந்த பேச்சாற்றலுடன் பிறந்தவர்கள். அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களின் வசீகரமும், அறிவார்ந்த வலிமையும் இணைந்து, அவர்களை நம்பமுடியாத அளவிற்கு நம்பக்கூடியவராக மாற்றுகிறது. மிதுன ராசிக்காரர்கள் பல முகங்களை கொண்டவர்கள்.
அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுபவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் இருக்கும் சூழ்நிலை அல்லது உடனிருக்கும் நபர்களுக்கு ஏற்ப தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ளும் சாமர்த்தியம் அவர்களுக்கு இருக்கிறது. இந்த பல முக திறன் சில சமயங்களில் அவர்கள் நல்லவர்களாக நடிப்பது போல் தோன்ற வைக்கும்.
மிதுன ராசிக்காரர்கள் பச்சோந்திகள், அவர்கள் எந்த கூட்டத்திலும் கலந்து தங்கள் புத்திசாலித்தனம் மற்றும் வசீகரத்தால் எந்தவொரு நபரையும் வெல்ல முடியும். ஆனால் அவர்கள் கனிவான வெளித்தோற்றத்திற்கு பின்னால் ஒரு சுயநல நோக்கம் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் உறுதியானவர்கள், பெரும்பாலும் பொறுப்பானவர்களாகவும் மற்றும் ஒழுக்கமானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அவர்கள் தீவிரமானவர்களாகவும் முதிர்ச்சியுள்ளவர்களாகவும் இருப்பதற்கான நற்பெயரைக் கொண்டுள்ளனர், இது பெரும்பாலும் அவர்களை நல்லவர்கள் என்று அனைவரையும் நம்ப வைக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு அந்தஸ்து மற்றும் அங்கீகாரத்தின் மீது வலுவான ஆசை உள்ளது. இந்த ஆசை பெரும்பாலும் அவர்களை எப்போதும் தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள வைக்கிறது. அனைவரையும் நம்ப வைக்க அவர்கள் நல்லவர் முகமூடியை அணிந்து கொள்கிறார்கள். அவர்களின் இந்த நல்லவர் வேஷம் அவர்களை வெற்றிப்படிக்ட்டில் வேகமாக ஏற வைக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

