Latest Updates
-
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..
இந்த 5 ராசி ஆண்கள் அவங்க காதலி/மனைவி மீது மோசமாக சந்தேகப்படுபவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
காதல் மற்றும் திருமண உறவு மகிழ்ச்சியானதாகவும், உறுதியானதாகவும் இருக்க நம்பிக்கையும், புரிதலும் மிகவும் அவசியமானதாகும். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்திருக்கும் உறவு மட்டுமே இறுதிவரை நிலைத்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக சிலர் தங்கள் துணை மீது எப்போதும் சந்தேகம் கொள்ளும் மோசமான குணத்துடன் இருக்கிறார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்களிடம் இந்த மோசமான குணம் இருக்கும். அவர்கள் தங்கள் துணையின் செயல்பாடுகளின் மீது எப்போதும் சந்தேகம் கொண்டிருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் காதல் உறவில் மட்டுமல்ல திருமணமான பிறகும் கூட அவர்கள் தங்கள் துணையின் செயல்கள் மீதும், நோக்கங்கள் சந்தேகம் கொள்பவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் துணை மீது எப்போதும் சந்தேகம் கொள்பவராக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
கிரகங்களின் தளபதியான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் போக்கை வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் காதல் உறவில் தீவிர விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்கள், தங்கள் துணையிடமும் அதே விசுவாசத்தை எதிர்பார்க்கிறார்கள். எனவே தங்கள் துணையின் செயல்பாட்டில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட அவர்களுக்குள் இருக்கும் சந்தேக மிருகத்தை விழித்துக் கொள்ள வைக்கும். அவர்களுக்கு காதல் போதுமானதாக இல்லையென்று உணரும்போது அவர்களின் சந்தேக குணம் தீவிரமடைகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தீராத ஆர்வம் கொண்ட வண்ணத்துப் பூச்சிகள், இந்த தீராத ஆர்வம் அவர்களின் காதல் உறவுகளிலும் நீள்கிறது. அவர்களின் இரட்டை ஆளுமை அவர்களை அதிகமாக சிந்திக்க வைக்கிறது, இது அவர்களின் துணையின் ஒவ்வொரு வார்த்தைக்கும், செயலுக்கும் பின்னால் உள்ள நோக்கங்களை தொடர்ந்து கேள்வி கேட்க வைக்கிறது. அவர்கள் தங்கள் துணையின் ஒவ்வொரு செயலுக்கும் தாங்களாகவே அர்த்தத்தை உருவாக்கி அவர்கள் மீது சந்தேகம் கொள்வார்கள்.
கன்னி
புத்திக்கூர்மை மற்றும் பகுப்பாய்வுத் திறமைக்குப் பெயர் பெற்ற கன்னி ராசிக்காரர்கள், தங்கள் உறவுகளில் தங்களின் பகுத்தறியும் குணத்தை தீவிரமாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் துணையின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும், அவர்களின் மெசேஜ் முதல் அவர்கள் பதிலளிக்கும் விதம் வரை அனைத்தையும் கவனித்து அவர்களின் நோக்கங்களை ஆராய்கிறார்கள். இந்த தொடர்ச்சியான பகுப்பாய்வு அவர்களுக்குள் சந்தேகத்தை வளர்க்கலாம், ஏனெனில் கன்னி ராசிக்காரர்கள் காதலில் முழுமையைத் தேடத் தூண்டும் அவர்களின் உள்ளுணர்வுடன் தொடர்ந்து போராடுகிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள், தங்கள் தீவிரமான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட இயல்புடன், தங்கள் உணர்ச்சிகளைக் கடுமையாகப் பாதுகாக்கிறார்கள். இருப்பினும், இந்த உணர்ச்சி பாதுகாப்பு அவர்களுக்குள் சந்தேக உணர்வை எழுப்பக்கூடும். சந்தேகிக்க எந்தக் காரணமும் இல்லாவிட்டாலும் கூட, அவர்களின் உணர்ச்சிகளுடனான ஆழமான தொடர்பு, அவர்களின் துணையின் உணர்வுகளின் நேர்மையை அவர்களை கேள்விக்குள்ளாக்க வைக்கிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் காதலை எப்போதும் எதார்த்த மனநிலையுடன் அணுகுவார்கள், அவர்கள் உறவின் நீண்டகால விளைவுகளை மதிப்பிட்டு அதற்கேற்றாற் போல செயல்படுவார்கள். இந்த நடைமுறை வாழ்க்கையின் பல பகுதிகளில் உதவிகரமாக இருந்தாலும், அது காதல் விஷயங்களில் கடுமையான சந்தேகத்திற்கு வழிவகுக்கும். மகர ராசிக்காரர்கள் தங்கள் துணையும் தங்களைப் போலவே காதலில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறார்களா என்று சந்தேகப்படுவார்கள், இது அவர்கள் உறவில் அமைதியின்மையை உருவாக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

