Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உங்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருக்கா? அப்போ நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி..!
ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் வந்து விட்டாலோ அல்லது வசதியான ஆள் என்றாலோ "அவனுக்கு என்னப்பா மச்சக்காரன்" என்பார்கள்.. ஆம் அது உண்மைதான். அதிலும் இந்த 5 இடத்தில் உங்களுக்கு மச்சம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி என மச்ச சாஸ்திரம் கூறுகிறது.
மச்சம் என்றால் என்ன?
நமது உடலில் தலையில் இருந்து கால் பாதங்கள் வரையில் சதைப் பாகத்தை மூடியிருக்கும் மேல் தோலில் அமைந்துள்ள சிறிய புள்ளிகள் தான் மச்சங்கள் எனப்படும். இது மஞ்சள், நீலம் , சிவப்பு, வெளுப்பு, கருப்பு போன்ற ஏதாவது ஒரு நிறத்திலோ அல்லது பல நிறத்திலோ இருக்கலாம். அது போல இதன் அளவுகள் கூட வேறு படலாம். உதாரணமாக கடுகைப் போலவோ, மிளகைப் போலவோ அல்லது அதற்கு மேலும் பெரிதாகவோ காணப்படலாம்.

மச்ச பலன்கள்
மச்சங்கள் சுப பலன்களை தரும் வல்லமை கொண்டதாக உள்ளது. நம் உடலில் இருக்கக்கூடிய மச்சங்களும் அதனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்களும் என்ன என்பது குறித்து இந்த பதில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
உதட்டின் மேல் மச்சம்
முதலாவதாக ஆண்களுக்கு உதட்டின் மேல் வலது புறத்திலும் பெண்களுக்கு உதட்டின் மேல் இடது புறத்திலும் மச்சம் இருந்தால் அவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள், நல்ல பலன்கள் அவர்களை தேடி வரும், அதிர்ஷ்டம் ஏற்படும், இவர்கள் கண்டிப்பாக கோடீஸ்வரர் ஆவது உறுதி. ஜன வசியம் என சொல்லப்படக்கூடிய ஜனங்களை வசியப்படுத்தும் அமைப்பு இவர்களுக்கு அதிகம் உண்டு.
புருவத்தில் மச்சம்
ஆண்களுக்கு வலது புருவத்தின் மேல் மச்சம் இருந்தால் அவர்கள் தலைமை பொறுப்பை ஏற்க போகிறார்கள் என்று அர்த்தமாம். அது அரசியலாக இருந்தாலும் சரி அல்லது பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி, குடும்பத்திலும் சரி இவர்கள் தலைமை பொறுப்பை ஏற்று நடக்கக்கூடிய நபராக இருப்பார். அதேபோல பெண்களுக்கு இடது புருவத்தின் மேல் மச்சம் இருந்தால் அவர்களும் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தக்கூடிய வல்லமை பெற்றவராக இருப்பார் என்று அர்த்தமாம்.
கன்னத்தின் மச்சம்
வலது கன்னத்தில் மச்சம் இருந்தால், நீங்கள் ஆதிக்கம் செலுத்தும் இயல்புடையவர் என்பதற்கான அறிகுறியாகும். நீங்கள் உங்கள் தர்க்கத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முடிவுகளை எடுப்பீர்கள், இதனால் சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் வாழ்க்கையில் நன்றாக சம்பாதிப்பீர்கள். இடது கன்னத்தில் மச்சம் இருப்பது குறுகிய கோபத்தின் அடையாளம். நீங்கள் ஒரு உள்முக சிந்தனையாளர், அவர்களின் பொருள்சார் தேவைகளுக்கு கூடுதல் செலவு செய்ய விரும்புகிறீர்கள். கண்டிப்பாக இவர்களும் கோடீஸ்வர்ரர் ஆவது உறுதி என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது..
ஆள்காட்டி விரல்
ஆண்களுக்கு வலது கையில் ஆள்காட்டி விரல் கீழ் மச்சம் இருந்தால் அவர்கள் தொட்டது துலங்கும். செல்வ செழிப்போடு இருப்பார்கள். வைரம் வைருடியம் வாங்கும் யோகம் ஏற்படும். தங்கத்தை சேர்த்து வைக்கக்கூடிய குபேரனாக திகழ்வார்கள்... அதேபோல பெண்களுக்கு இடது கையில் ஆள்காட்டி விரல் கீழ் மச்சம் இருந்தால் செல்வ செழிப்போடு திகழ்வீர்கள். லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்ததாக இருக்கும் நீங்கள் தீர்க்க கரசியாக திகழ்வீர்கள்.
தொப்புள்
அதேபோல பெண்களுக்கு தொப்புளில் இடது புறத்தில் மச்சம் இருந்தால் வம்சம் விருத்தியாகும். அந்தக் குழந்தையின் மூலம் பணம் பெருகும் சொத்துக்கள் குவியும். தாய் மூலமாகவும் ஏற்படும். அதேபோல வலது புறத்தில் தொப்புளில் மச்சம் இருந்தால் ஆண்களுக்கு வாழையடி வாழையாக சொத்து சேர்க்கும் யோகம் கிடைக்கப்போகிறது என்று அர்த்தமாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications