Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
உங்க ராசியை சொல்லுங்க.. 2025-ல் உங்களுக்கு எந்த மாதம் மோசமா இருக்கப்போகுது-ன்னு சொல்றோம்...
Worst Month Of 2025 For Each Zodiac Sign In Tamil: இன்னும் சில வாரங்களில் புதிய ஆண்டில் நுழையவுள்ளோம். அனைவருமே ஒரு புதிய எதிர்பார்ப்புடன் இந்த ஆண்டில் நுழைய காத்துக் கொண்டிருப்போம். பொதுவாக ஒரு ஆண்டை எடுத்துக் கொண்டால், அந்த ஆண்டில் சில மாதங்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், சில மாதங்கள் மோசமாகவும் இருக்கலாம்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதம் மோசமானதாக, சவால்கள் மற்றும் பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கப் போகிறது. இப்போது 2025 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த மாதம் மோசமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் மிகவும் சவாலான மாதமாக இருக்கும். வேலைகளில் தடைகளை சந்திப்பீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வாக்குவாதங்களில் அதிகம் ஈடுபடுவீர்டகள். பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இதனால் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். நிதி ரீதியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். உறவுகளில் தவறான புரிதல்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் பொறுமையை சோதிக்கும் மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் நிதி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். உறவுகளில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தத்தால் அவதிப்பட நேரிடும். பயணங்களில் தடைகளை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் மோசமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் வேலைகளில் மிகுந்த மன அழுத்தத்தை சந்திப்பீர்கள். இதனால் ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். மேலும் இம்மாதத்தில் அதிக செலவுகளால் பட்ஜெட் பாழாகலாம். எளிதில் முடிக்க வேண்டிய வேலைகள் கூட சிரமமாக இருக்கும். உறவுகள் பதட்டமாக இருக்கும். மொத்தத்தில் போராட்டமான மாதமாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் கடினமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் கடக ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு அதன் விளைவாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். திட்டமிட்ட வேலைகள் நடக்காமல் போகலாம். நிதி ரீதியாக, நிறைய செலவுகளை சந்திக்க நேரிடலாம். அன்புக்குரியவர்களுடன் தவறான புரிதல்கள், வாக்குவாதங்கள் ஏற்படலாம். இம்மாதத்தில் புதிய விஷயங்கள் எதையும் தொடங்க வேண்டாம். இல்லாவிட்டால், அது தோல்வியடையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் மோசமாக இருக்கும். கஷ்டப்பட்டு போட்ட திட்டங்கள் அனைத்தும் கடைசி நேரத்தில் ரத்தாகலாம். சிறு கருத்து வேறுபாடுகளும் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கலாம். தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். பயணங்களை மேற்கொள்ளும் திட்டங்களில் தடைகளை ஏற்படலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் கடினமான மாதமாக இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். முன்னேற்றங்களில் தடைகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். இம்மாதத்தில் மனக்கவலை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தத்தால் அவதிப்பட நேரிடும். வாழ்க்கையையே வெறுக்கும் அளவில் விரக்தி அடைவீர்கள். இம்மாதத்தில் எந்த முடிவை எடுப்பதும் கடினமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் மோசமான மாதமாக இருக்கும். பல சவால்களை இம்மாதத்தில் சந்திப்பீர்கள். நிதி ரீதியாக கடினமானதாக இருக்கும். செலவுகள் கையை மீறி போகும். இதனால் பட்ஜெட் சீர்குலைந்து நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக மன அழுத்தம் அதிகரிக்கும். மேலும் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அதிக கோபத்தால் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். பல ஏமாற்றங்களை சந்திப்பீர்கள். எந்த முடிவும் எடுக்க முடியாமல் அவதிப்படுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் படுமோசமான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் வேலையில் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். நிதி ரீதியாக செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். உறவுகளில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் உங்களைப் பாதிக்கலாம். உங்களின் திட்டங்களில் தடைகளை சந்திக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் சவாலான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் வேலைகளில் பின்னடைவை சந்திப்பீர்கள். நிதித் திட்டங்கள் வீழ்ச்சியடையும். சிறிய தவறான புரிதல்கள் பெரிய மோதல்களாக வெடிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மிகுந்த சோர்வை சந்திப்பீர்கள். ஏமாற்றங்களை சந்திக்கலாம். உங்கள் முடிவெடுக்கும் சக்தி சோதிக்கப்படும். தனிமையில் இருப்பதாக உணர்வீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் கடினமான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் சில முரண்பாடுகளை சந்திக்கலாம். நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். உங்களின் பொறுமை சோதனை செய்யப்படும். வழக்கத்தை விட அதிகமாக கோபப்படுவீர்கள். ஆரோக்கியத்தைப் பெறுத்தவரை கூடுதல் மன அழுத்தம் உங்களை சோர்வடையக் செய்யலாம். முடிவெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம்
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் கடினமான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் உங்களின் வேலைகள் பாதிக்கப்படும். திடீர் செலவுகள் அதிகரிக்கும். உறவில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, எனவே அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். இம்மாதத்தில் பல மோசமான சம்பவங்களை சந்திக்க நேரிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் பண பிரச்சனைகளை அதிகம் சந்திப்பீர்கள். உறவுகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் அதிகமாக இருக்கும். வேலைகளில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். முடிவெடுப்பது கடினமாக இருக்கலாம். முக்கியமாக தனிமையை உணர்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications