Latest Updates
-
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்!
இந்த 4 நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் ஆதிக்கம் செய்வதில் ராணியாக இருப்பார்களாம்... இவங்க காதலர் ரொம்ப பாவம்...
காதல் உறவுகள் என்று வரும்போது அதில் இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிதலுடன் இருக்க வேண்டும். இருவரில் ஒருவர் ஆதிக்கம் செலுத்தும் உறவில் அன்பு குறைந்து அதிகாரம் அதிகரித்துவிடும். இது இந்த உறவை எதிர்மறையானதாக மாற்றும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் தங்கள் காதல் மற்றும் திருமண உறவில் ஆதிக்கம் செலுத்தும் போக்கைக் கொண்டுள்ளனர். இவர்கள் தங்களின் தேவை என்னவென்பதை நன்கு அறிவார்கள், அதை மற்றவர்கள் மூலம் எப்படி நிறைவேற்ற வேண்டுமென்றும் நன்கு அறிவார்கள். தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்த அவர்கள் ஒருபோதும் பயப்படுவதில்லை.

அவர்கள் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் அவர்கள் தங்கள் உறவுகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இவர்களை காதலிப்பவர்கள் எப்போதும் விட்டுக்கொடுக்கவும், மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்க வேண்டும். இந்த பதிவில் எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் போக்கு உள்ளவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
அஸ்வினி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் இயற்கையாகவே தலைமைப் பதவிக்குரிய குணங்கள் இருக்கும். அவர்களின் ஆதிக்க குணம் அவர்களின் உறவுகளில் மிகவும் வெளிப்படையாகத் தெரியும். அவர்கள் அசாதாரண தன்னம்பிக்கை கொண்டவர்கள், அனைத்து விஷயங்களிலும் ஆர்வமுள்ளவர்கள், எப்போதும் சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.
உங்கள் காதலி மேஷ ராசிக்காரராக இருந்தால், நீங்கள் ஒரு பொறுப்பான, தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேச பயப்படாத ஒரு துணையை எதிர்பார்க்கலாம். அவர்களின் உறுதியும், பிடிவாதமும் சில சமயங்களில் உறவில் அச்சுறுத்தலாக மாறலாம். எனவே அவர்களை காதலிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
உத்திரம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே ராணிகளாக பிறந்தவர்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ராணி போலவே நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் கவர்ச்சிகரமான ஆளுமைகளால், அவர்கள் எந்த உறவிலும் எளிதாக அதிகாரத்தை கைபிடிப்பார்கள்.
அவர்கள் உரையாடுவதில் திறமையானவர்களாக இருப்பார்கள், முயற்சிகளை முன்னெடுப்பார்கள், மேலும் அவர்களின் வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் கவலைப்பட வேண்டாம், அவர்கள் தங்கள் காதலருக்கு தேவையான அன்பையும், கவனத்தையும் மற்றும் பாசத்தையும் பொழிவார்.
அனுஷம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்கள் தீவிரம் மற்றும் ஆர்வத்திற்கு பெயர் பெற்றவர்கள், இது சில நேரங்களில் அளவிற்கு அதிகமானதாக மாறலாம். ஒரு ஆதிக்கம் செலுத்தும் காதலியாக, அவர் தங்கள் காதலரின் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை ஆழமாக ஆராய்வார்கள், அதன் மூலம் அவர்களைக் கட்டுப்படுத்துவார்கள்.
அவர்களின் வலுவான விருப்பமும் உறுதியும் சில சமயங்களில் அச்சுறுத்தலாக மாறலாம், ஆனால் அதுவே அவர்களை மிகவும் விசுவாசமானவராக மாற்றும். அவர்களின் காதலர் அவர்களுடைய தீவிர அன்பு மற்றும் பாசத்திற்கு சரணடையத் தயாராக இருக்க வேண்டும்.
திருவோணம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் லட்சியமும், உந்துதலும் கொண்டவர்கள், உறவுகள் உட்பட வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற வலுவான ஆசை கொண்டவர்கள். ஆதிக்கம் செலுத்தும் காதலியாக, அவர்கள் அனைத்து விஷயங்களையும் பொறுப்பேற்று வழிநடத்துவார்கள், தங்களின் காதலர் அவர்களின் வழியைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அவர்களின் நடைமுறை மற்றும் பொறுப்பான தன்மை அவரை உறவில் முதலாளியாக மாற்றக்கூடும், ஆனால் அதுவே அவரை மிகவும் நம்பகமானவராக மாற்றுகிறது. அவர்கள் தங்களுடைய காதலர் தங்களின் இலக்குகள் மற்றும் லட்சியங்களை ஆதரிக்கத் தயாராக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
