Latest Updates
-
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்!
இந்த 3 ராசிக்காரங்க கவர்ச்சியான உடலுடன் இருப்பார்களாம்..அதுக்காக ரொம்ப கஷ்டப்படவும் மாட்டாங்க..உங்க ராசி என்ன?
ஆரோக்கியமே ஒருவர் வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வமாகும். அதற்காகத்தான் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள் மற்றும் அதிகமான பணத்தை செலவழிக்கிறார்கள். ஆனால் சிலர் பெரிதாக எந்த முயற்சியும் இல்லாமலேயே தங்களை ஆரோக்கியமாகவும், வசீகரமான தோற்றத்துடனும் வைத்திருக்கிறார்கள்.
மற்றவர்கள் கடுமையான உடற்பயிற்சி வழக்கத்தை கடைப்பிடிக்கவோ அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை வாழவோ சிரமப்படும் அதே வேளையில், இந்த நபர்கள் இயல்பாகவே தங்கள் உடல் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். இதற்கு அவர்களின் பிறந்த ராசி முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சில ராசிகளில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பாகவும், ஒழுக்கமாகவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் உறுதியுடனும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. தங்கள் உடலை எளிதில் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அதிக வாய்ப்புள்ள ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்கள் ஒழுக்கத்திற்கும், வலுவான பொறுப்புணர்வுக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்று வரும்போது வெளிப்புற உந்துதலை நம்பியிருக்க மாட்டார்கள், அவர்கள் தங்கள் சுய ஆர்வத்தை நம்புகிறார்கள். அவர்கள் ஒரு ஆரோக்கியத் இலக்கை நிர்ணயித்துவிட்டால், அதற்கான முயற்சிகளை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒருபகுதியாக இணைத்துக் கொள்கிறார்கள்.
அவர்களின் உறுதியான மனமும் இதில் முக்கியப்பங்கை வகிக்கிறது. நல்ல ஆரோக்கியம் ஒரு முதலீடு என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், மேலும் அதைப் பராமரிக்க முயற்சி செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஆரோக்கியமாக இருப்பது என்பது ஸ்டைலுக்காக அல்ல, அது நீண்ட கால வெற்றிக்கான தேவையாக உள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அதீதஆற்றல் கொண்டவர்கள் மற்றும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் உடல் செயல்பாடுகளில் எப்போதும் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள். தங்கள் கம்பீரமான தோற்றத்தின் மீது அவர்கள் பெருமை உணர்வையும் கொண்டுள்ளனர். அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க விரும்பும் அதே நேரத்தில், அழகாக இருப்பதையும் விரும்புகிறார்கள், எனவே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் எப்போதும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
தங்களை கவர்ச்சியானவராக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பராமரிக்க அவர்களுக்கு உந்துதலாக இருக்கிறது. சிம்ம ராசிக்காரர்கள், ஆரோக்கியமாக இருப்பதை அவர்களின் நம்பிக்கையையும் வாழ்க்கையின் மீதான ஆர்வத்தையும் வெளிப்படுத்த சிறந்த வழியாகக் கருதுகிறார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஒழுக்கம், சுயகட்டுப்பாடு மற்றும் முன்னேற்றம் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் அதிக கவனம் செலுத்துகிறார்கள், பெரும்பாலும் தங்கள் உடல் சிறப்பாகச் செயல்பட சிறந்த உடற்பயிற்சி நடைமுறைகள், ஊட்டச்சத்து திட்டங்கள் மற்றும் ஆரோக்கிய பழக்கவழக்கங்களை போன்றவற்றை பின்பற்றுகின்றனர்.
அவர்கள் வெறும்ஆற்றலுக்காக மட்டும் உடற்பயிற்சி செய்வதில்லை, அவர்கள் சரியான உடல் வடிவம், செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையில் கவனம் செலுத்துகிறார்கள். யோகா, நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி என எதுவாக இருந்தாலும், அவர்கள் உறுதியான மனநிலையுடனும், நீண்டகால பலனுக்கான விருப்பத்துடனும் உடற்தகுதியை வளர்த்துக் கொள்கிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
