Latest Updates
-
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
இந்த 3 ராசிக்காரங்களுக்கு திருமணத்திற்கு பிறகுதான் துரதிர்ஷ்டம் வருமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் அந்த திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைகிறதா அல்லது மோசமானதாக அமைகிறதா என்பது நாம் எப்படிப்பட்டவரை திருமணம் செய்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
ஜோதிட சாஸ்திரங்களின்படி, சில ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளை நீண்ட காலம் கடைபிடிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அது காதலாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட ராசிக்காரர்கள் உறவுகளின் மீதான பற்றுதலை இழக்கத் தொடங்குகிறார்கள். இவர்கள் வெறும் பெயரளவில் மட்டுமே உறவைக் கடைபிடிப்பார்கள்.

இவர்களின் இந்த ஆளுமையால் அவர்கள் திருமண வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திப்பார்கள், மேலும் இவர்கள் வாழ்க்கையின் இரண்டாம் பகுதி அதிக துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் அதிக பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சுயநலவாதிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் சொந்த நலனுக்காக மட்டுமே மற்றவர்களுக்கு உதவுவார்கள். இந்த ராசிக்காரர்களிடம் விசுவாசம் என்ற ஒன்று கிடையாது. ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்காரர்கள் திருமணத்திற்குப் பிறகு பல பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்குவார்கள்.
இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் எளிதில் ஈர்க்கப்பட்டு அவர்களுடன் நெருங்கி உறவாட முயற்சிப்பார்கள். இருப்பினும், இவர்களின் உண்மையான குணத்தை அவர்கள் உணர்ந்தவுடன், இவர்களிடமிருந்து விலகிச் செல்கிறார்கள். இதன் காரணமாக, அவர்களின் உறவுகள் உருவான சிறிது காலத்திலேயே பிரிகின்றன. இந்த இயல்பு காரணமாக, பல நேரங்களில் அவர்களின் திருமணம் மோசமான சூழ்நிலையில் சிக்கித்தவிக்கும்.
துலாம்
ஜோதிடத்தின் படி, துலாம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே மிகவும் சந்தேகத்திற்குரியவர்கள். அவர்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் யாரை காதலித்தாலும் அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். ஆனால் அவர்களின் சந்தேக குணம் காரணமாக, அவர்களின் உறவு விரைவில் முறிந்துவிட வாய்ப்புள்ளது.
இந்த ராசிக்காரர்களுக்கு உறவுகள் என்பது ஒரு நகைச்சுவை போன்றது. அவர்கள் யாருடனும் எளிதில் இணைந்திருப்பார்கள், அவர்களின் தேவைகள் நிறைவேறியவுடன், அந்த உறவை முறித்துக் கொள்கிறார்கள். மேலும் ஒரே நேரத்தில் பல உறவுகளில் இவர்கள் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. இவர்களின் வாழ்க்கைத்துணையால் கூட இவர்களின் உண்மையான நோக்கத்தை அறிந்து கொள்ள முடியாது.
கும்பம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கும்ப ராசிக்காரர்களின் உறவுகளில் நிலையற்ற தன்மை உள்ளது. கும்ப ராசிக்காரர்கள் மிகவும் வெளிப்படையானவர்கள். இவர்களின் கவனமும், ஆர்வமும் நேரத்திற்க்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். மேலும் ஒருபோதும் அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை கடைபிடிப்பதில்லை. எந்தவொரு உறவையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் இவர்களுக்கு இல்லை.
இந்த ராசிக்காரர்களுக்கு உறவை எப்படிப் பேணுவது என்று தெரியாது. அவர்கள் முழு மனதுடன் உறவில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்களின் இயல்பு ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும். எதிரில் இருப்பவர் தனது கட்டளைகளுக்கு ஆம் என்று கூறும்வரைதான் அவர்களுடனான உறவை அவர்கள் ஆதரிப்பார்கள், அவர்களின் வாழ்க்கைத்துணையும் இதற்கு விதிவிலக்கல்ல.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications