Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த 4 ராசிக்காரங்க எப்ப கல்யாணம் ஆகும்னு காத்திட்டு இருப்பாங்களாம்... இவங்க லட்சியமே கல்யாணம் பண்றதுதான்...!
திருமண வாழக்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். ஏனெனில் சமூகத்தில் ஒருவரை முழுமையான மனிதராக மாற்றுவது திருமணம்தான். ஆனால் இந்த திருமண வாழ்ககை அனைவருக்கும் மகிழ்ச்சிகரமானதாக அமைகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். தினமும் நம்மைச் சுற்றி நூற்றுக்கணக்கான விவாகரத்து வழக்குகளை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
பிரிவு அல்லது மோசமான வாழ்க்கைத்துணையால் ஏற்படும் பாதிப்புகளை நினைத்து அஞ்சி திருமணத்தை வெறுப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால் விதிவிலக்காக சிலர் திருமணம் செய்வதை தங்கள் வாழ்க்கையின் இலட்சியமாகவே வைத்திருப்பார்கள். அவர்களின் இந்த எண்ண ஓட்டத்திற்கு அவர்களின் பிறந்த ராசி முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

உண்மைதான், சில ரா சிகளில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். வாழ்க்கையின் புதிய பக்கங்களை தெரிந்து கொள்ள அவர்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள். இந்த பதிவில் அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பயமில்லாமல் வாழ்க்கையை வழிநடத்திச் செல்பவர்கள் மற்றும் அவர்களின் உற்சாகத்திற்கும் ஆர்வத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இந்த பயமில்லா குணம் அவர்களின் திருமண வாழ்க்கைக்கும் பொருந்தும்,
அவர்கள் வாழ்க்கையில் மற்ற அனைத்து சுவாரஸ்யமான விஷயங்களைப் போலவே திருமண உறவையும் அணுகுகிறார்கள். புதிய சாகசங்களை அடைய ஆர்வமாக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் திருமணத்தை மகிழ்ச்சிகரமான பயணமாக பார்க்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறார்கள், தங்கள் துணையுடன் அன்பின் ஆழத்தையும் அர்ப்பணிப்பையும் ஆராய்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எப்பொழுதும் கவனத்தின் மையமாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் ஒரு ஆர்வம் நிறைந்த வசீகரமான அடையாளமாவர். திருமணம் என்பது உலகிற்கு அன்பையும் விசுவாசத்தையும் காட்ட ஒரு வாய்ப்பாக அவர்கள் கருதுகிறார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் சூழப்பட்ட ஒரு பெரிய கொண்டாட்டத்தைப் பற்றி எப்போதும் உற்சாகமாக கனவு காண்கிறார்கள். தங்கள் அன்புக்குரியவர்களின் கரம் கோர்க்க அவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் திருமண நாளுக்கான அவர்களின் உற்சாகம் மற்றவர்களுக்கும் பரவக்கூடியது, மேலும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகளை உருவாக்க அவர்களால் நீண்ட காலமாக தயாராக இருக்கிறார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சமநிலை மற்றும் நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்றவர்கள் மற்றும் அவர்கள் எப்போதும் தங்களுக்கு சரியான துணையைக் கண்டறிந்து இணக்கமான உறவை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளனர். அவர்கள் திருமணத்தை காதல் மற்றும் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பார்க்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் ஆத்ம துணையுடன் இணைய எப்போதும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் ஒன்றாக ஒரு வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதில் உற்சாகமாக உள்ளனர். திருமண வாழ்க்கையில் தங்கள் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் ஆசைகளை உண்மையிலேயே புரிந்துகொண்டு ஆதரிக்கும் ஒருவருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரம் மற்றும் சாகசத்தை விரும்பும் ஆன்மாக்கள், அதற்காக அவர்கள் திருமணத்தை வெறுப்பவர்கள் என்று அர்த்தமல்ல. தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கை மற்றும் ஆய்வுக்கான ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு துணையைக் கண்டுபிடிக்க ஆர்வமாக உள்ளனர்.
அவர்கள் திருமணத்தை ஒரு உற்சாகமான பயணமாக பார்க்கிறார்கள், புதிய அனுபவங்கள் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இதிலிருந்து கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் தங்கள் துணையுடன் திருமண வாழ்வை சாகசமாக வாழ விரும்புகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications