Latest Updates
-
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு சோகமா இருந்தாலும் அதை எப்பவும் மத்தவங்ககிட்ட காட்டிக்க மாட்டாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். சிலர் திறந்த புத்தகம் போல மிகவும் வெளிப்படையாக இருப்பார்கள், அவர்களின் உணர்வுகளும், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் அவர்களின் முகத்திலேயே தெரிந்து விடும். சிலர் இதற்கு முற்றிலும் எதிர்மறையானவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் உணர்வுகளை மறைப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள், குறிப்பாக அவர்களின் கவலை மற்றும் சோகத்தை மறைப்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் எவ்வளவு சோகத்தில் இருந்தாலும், மனப்போராட்டத்தில் இருந்தாலும் அதனை சிறு புன்னகையுடன் கடந்து விடுவார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் பயம் மற்றும் கவலையை மறைப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மகரம்
சனிபகவானால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள் தங்கள் எதார்த்த மற்றும் ஒழுக்கமான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் உணர்வுகளை மறைப்பதில் திறமையானவர்களாக இருப்பார்கள், உலகிற்கு ஒரு உறுதியான மற்றும் நம்பகமான வெளித்தோற்றத்தை மட்டுமே அவர்கள் காட்டுவார்கள். இந்த ராசிக்காரர்கள் லட்சிய உணர்வு, உறுதிப்பாடு மற்றும் வலுவான பணி நெறிமுறைகளுடன் தொடர்புடையர்கள்.
மகர ராசிக்காரர்கள் பொதுவாக தங்கள் கவலை மற்றும் மகிழ்ச்சியின்மையை தங்கள் வேலையில் முழுமையாக செலுத்துகிறார்கள், சோகத்தை மறைக்கும் மாற்று வழியாக வேலையை பார்க்கிறார்கள். தங்கள் மனக்கவலைகளிலிருந்து தங்களைத் திசைதிருப்ப ஒரு வழியாக, அவர்கள் வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இந்த பண்பு, அவர்கள் கடினமான நேரத்தைச் சந்திக்கும்போது மற்றவர்களால் அதைக் கண்டறிவதை பெரும்பாலும் கடினமாக்குகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் சோகத்தை மறைத்துக் கொள்ளும் கலையில் கைதேர்ந்தவர்கள். புத்திக்கூர்மை மற்றும் விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கன்னி ராசிக்காரர்கள் பெரும்பாலும் வாழ்க்கையில் முழுமையை அடைவதில் அதிக கவனம் செலுத்துவதால், தங்கள் சொந்த உணர்வுகளை ஒப்புக்கொள்வதையும், வெளிப்படுத்துவதையும் தவிர்க்கிறார்கள். கன்னி ராசிக்காரர்கள் இயல்பிலேயே பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்டவர்கள். அவர்கள் மகிழ்ச்சியின்மையை எதிர்கொள்ளும்போது, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் சூழ்நிலையை ஆராய்ந்து அதை சரிசெய்ய முயற்சிப்பார்கள்.
அவர்கள் தங்கள் போராட்டங்களை உள்வாங்கிக் கொள்ளும் போக்கைக் கொண்டுள்ளனர், அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை விட அதை தீர்க்கும் போராட்டங்களை தங்கள் மனதிற்குள் நடத்துகிறார்கள். அவர்கள் தவிர்க்க முடியாமல் தோல்வியடையும் போது, அவர்கள் தங்கள் ஏமாற்றம் மற்றும் அதிருப்தி உணர்வுகளை உலகத்திடமிருந்து மறைப்பார்கள். அவர்களின் அமைதியான வெளித்தோற்றத்தை பார்த்து ஏமாந்து விடக்கூடாது, ஏனெனில் அவர்களின் மனதில் எப்போதும் போராட்டங்களும், திட்டங்களும் இருக்கும்.
துலாம்
வாழ்க்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை விரும்பும் துலாம் ராசிக்காரர்கள் உணர்வுகளை மறைப்பது என்று வரும்போது சிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் ராஜதந்திர இயல்புக்கும், மோதலைத் தவிர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பத்திற்கும் பெயர் பெற்றவர்கள். அதாவது அவர்கள் வாழ்க்கையில் சமநிலையை பராமரிக்க தங்கள் மகிழ்ச்சியின்மையை மறைப்பார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் மகிழ்ச்சியான முகபாவனையை கடைப்பிடிப்பதில் சிறந்தவர்கள். அவர்கள் மனதிற்குள் சூறாவளியே வீசினாலும், அவர்கள் வெளியுலகத்திற்கு புன்னகை நிறைந்த முகத்தை மட்டுமே வெளிப்படுத்துவார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியின்மையை வெளிப்படுத்துவதை விட மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்வதில் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் தன்னிச்சையான மற்றும் இணக்கமற்ற தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் சொந்த விதிகளின் அடிப்படையில் வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள், மேலும் தங்கள் பிரச்சினைகளை தங்களின் தனித்துவமான முறையில் கையாள விரும்புகிறார்கள்.
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் சுதந்திரத்தை மிகவும் மதிக்கிறார்கள், அவர்கள் தங்கள் நெருங்கிய நண்பர்களிடம் கூட தங்களின் மகிழ்ச்சியின்மையை வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் ஆழ்ந்த மகிழ்ச்சியின்மையை தனிமை அல்லது அலட்சியம் போன்றவற்றின் மூலம் மறைப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












