Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
Weekly Numerology:இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 23 ஜூன் 2024 முதல் 29 ஜூன் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படும். தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதில் பிரச்சனைகளை சந்திக்கலாம். பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் சிக்க நேரிடும். யாரை அதிகம் நம்பிவிடாதீர்கள். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்கலாம். அவசரப்பட்டு எடுத்த தவறான முடிவின் விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த வாரத்தில் எதிர்மறை உங்களை ஆட்கொள்ளலாம். தன்னம்பிக்கை குறையும். அதிகமாக சிந்திப்பதால் ஆரோக்கியம மோசமடைய நேரிடும்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிந்திக்காமல் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கக்கூடாது. மேலும் மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்கள் சோம்பலை விடுத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பயனற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். சிறு விஷயங்களுக்கு உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சண்டையிடுவதைத் தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அலுவலகத்தில் சிறிய வேலைகளை கூட கவனமாக செய்ய வேண்டும். தொழிலதிபர்களுக்கு இந்த வாரம் பிஸியாக இருக்கும். கூட்டு வணிகம் செய்து வந்தால், உங்கள் கூட்டாண்மை முறியலாம். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். ஏதேனும் புதிய படிப்பில் சேர விரும்பினால் அதற்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள், அலட்சியமாக இருக்காதீர்கள்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கலாம். இதனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைவீர்கள். இந்நிலையில் சிறு ப்ரேக் எடுக்க வேண்டும். இது புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்ய முடியும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, உங்கள் வாழ்க்கைமுறையில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்யலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள, நீங்கள் தேவையற்ற முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவரகள் இந்த வாரத்தில் புதிய வேலைகளைத் தொடங்க நினைத்தால் வெற்றி கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் புதிதாகவும் வித்தியாசமாகவும் ஏதாவது செய்ய உத்வேகம் பெறலாம். இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களுடன் நன்றாக இருக்கும். உறவுகளைப் புதுப்பிக்க இது ஒரு சாதகமான வாரம். வார இறுதியில் ஒரு பயணத்தையும் திட்டமிடலாம். இந்த வாரத்தில், உங்கள் மனம் அமைதியாக இருக்கும்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அலுவலத்தில் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடந்த வாரம் அடைந்த வெற்றியின் அடிப்படையில் சில புதிய வியாபார முடிவுகளை எடுக்கலாம். முதலீடுகள் போன்றவற்றைச் செய்ய இது ஒரு நல்ல வாரம். வாழ்க்கைத் துணையுடன் நீண்ட தூரம் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மொத்தத்தில் இந்த வாரம் உங்களுக்கு மிகவும் இனிமையாக இருக்கும்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் அலுவலகத்தில் உயர்அதிகாரிகளை புதிய திட்டங்களால் கவர்வார்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். கூட்டு சேர்ந்து சில புதிய வேலைகளையும் தொடங்கலாம். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்பதை உணர வைப்பார். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறலாம். ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் பொறுப்புக்களை புறக்கணிக்கக்கூடாது. இல்லாவிட்டால் உறவுகளில் தூரம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியற்றவராக இருப்பார். மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலையில் எந்த விதமான மாற்றத்தையும் செய்வது உங்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுத்தால் நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகளை சந்திக்கலாம். உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள் மற்றும் வெளியே சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் அதிகமாகப் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இல்லையெனில் அது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். அதேப் போல் யாரிடமும் அதிகம் எதிர்பார்க்காதீர்கள், இல்லையெனில் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். நல்ல வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டும். உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சி செய்யுங்கள். மாணவர்கள் கல்வியில் சில தடைகளை சந்திக்கலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். சிறிய பிரச்சனைகளை கூட அலட்சியம் செய்யாதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











