Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
இந்த வாரம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிகளுக்கு கஷ்டமாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2025 பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் 2025 மார்ச் 01 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கும். உங்கள் வாழ்வில் இருந்த தடைகள் நீங்குவதைக் காணலாம். திட்டமிட்ட பணிகள் சரியான நேரத்தில் முடிவடையும். கலை உலகம் மற்றும் எழுத்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலக சூழல் தொடர்ந்து சாதகமாக இருக்கும். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி ரீதியாக இந்த வாரம் நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். செலவுகள் வருமானத்தை விட அதிகமாக இருக்கும். காதல் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு வெற்றியையும் சாதனையையும் அடைவீர்கள். வாரத்தின் தொடக்கத்திலிருந்து, நீங்கள் உங்கள் வேலையையும் பொறுப்புகளையும் முழுமையான அர்ப்பணிப்புடன் செய்வதைக் காண்பீர்கள்.வெளிநாட்டில் தொழிலை தொடங்கும் எண்ணம் ஈடேறும். தொழிலில் எதிர்பார்த்த லாபமும் விரிவாக்கமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பும் நம்பிக்கையும் நிலைத்திருக்கும். காதல் உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். காதல் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு அதிக பலன்களைப் பெறுவீர்கள். சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு, விரும்பிய வெற்றியைப் பெற கடினமாக உழைக்கவும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பழைய நோய்கள் மீண்டும் தலைதூக்கி, உடல் மற்றும் மன ரீதியாக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் மறைமுக எதிரிகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். வணிகம் தொடர்பான முடிவுகளை மிகவும் சிந்தனையுடன் எடுங்கள். மூதாதையர் சொத்து தொடர்பான தகராறுகள் உங்களை கவலையடையச் செய்யலாம். கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும், இல்லையெனில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். இந்த வாரம் எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, மக்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். வீடாக இருந்தாலும் சரி, குடும்பமாக இருந்தாலும் சரி, பணியிடமாக இருந்தாலும் சரி, மக்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணுவதன் மூலமும், அர்ப்பணிப்புடன் செயல்படுவதன் மூலமும் மட்டுமே சாதகமான பலன்களை பெற முடியும். இந்த வாரம் துலாம் ராசிக்காரர்கள் தங்கள் காதல் வாழ்க்கையையும் திருமண வாழ்க்கையையும் சிறப்பாகப் பராமரிக்க மிகவும் கவனமாகப் பேச வேண்டியிருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் எந்த வேலையையும் அவசரமாகச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேலையில் இருந்தால், உங்கள் வேலையை வேறொருவரிடம் விட்டுவிடுவது அல்லது அதைப் பற்றி அலட்சியமாக இருப்பது போன்ற தவறைச் செய்யக்கூடாது. தொழிலில் பெரிய மாற்றத்தைச் செய்யத் திட்டமிட்டிருந்தால், அவ்வாறு செய்வதற்கு முன் கவனமாக சிந்திக்க வேண்டும். உடல்நலம் மற்றும் உறவுகள் ஆகிய இரண்டும் மோசமாக இருக்கும். இந்த வாரம், கும்ப ராசிக்காரர்கள் தங்கள் வேலையுடன் சேர்ந்து தங்கள் உடலையும் கவனித்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைத்துணையுடன் ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











