Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமாவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 2024 செப்டம்பர் 21 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவாக இருப்பீர்கள். பணியிடத்தில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். இந்த வாரத்தில் நிதி ஆதாயம் கிடைக்கும். இதனால் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரத்தில் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். எடுக்கும் முடிவுகள் நல்ல சிறப்பான பலனைத் தரும். தொழிலதிபர்கள் புதிய திட்டங்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணப்பிரச்சனைகள் தீரும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், ஒற்றுமையும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குறைவான முயற்சியில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை தேடி வரும். உறவுகளைப் பொறுத்தவரை, இந்த வாரம் சிறப்பாக இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். கடினமான சூழ்நலைகளில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளால் உங்களின் முக்கியமான வேலைகளை முடிக்க முடியாமல் போகும். இந்த வாரத்தில் உங்களின் மோசமான ஆரோக்கியம் உங்கள் நடத்தையையும் பாதிக்கும். உங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள். இல்லாவிட்டால், அது பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் அடிக்கடி அவசர முடிவுகளை எடுப்பீர்கள். இது உங்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இந்த போக்கில் நீங்கள் சற்று கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரத்தில் எந்த முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் வேலைப்பளு அதிகரிக்கலா. நிதி ரீதியாக, நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். வருமானத்தை விட செலவு அதிகமாக செய்வதைத் தவிர்த்து, சேமிக்க முயற்சிக்க வேண்டும். இந்த வாரத்தில் உங்கள் ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்காது. உங்களின் வேலைகளில் தடைகளை சந்திக்கலாம். அதிக மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். பணப்பிரச்சனைகள் அதிகரிக்கும். உங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும். இந்த வாரத்தில் உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சித்தால், அதில் தோல்வியடையலாம். இருப்பினும் அதற்காக சோர்ந்து போகாமல் பொறுமையாக இருக்க வேண்டும். உறவுகளைப் பொறுத்தவரை, சற்று மோசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











