Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
வார ராசிபலன் (17 August 2025-23 August 2025)- இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உற்சாதகம் நிறைந்ததாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும் நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வார இறுதியில் பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் இந்த வாரத்தில் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். இருப்பினும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வார இறுதியில் நண்பர்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதாரணமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கருத்துக்கள் பாராட்டப்படும். வணிகர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நிறைய நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமான தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வார தொடக்கத்தில் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் போட்டிகள் அதிகரிக்கும். இருந்தாலும், கடின உழைப்பால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். நிதி விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கத்தை பேண வேண்டும். தம்பதிகளிடையே தவறான புரிதல்களால் பிரச்சனைகள் அதிகரிக்கும். வார இறுதியில் ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் சாதனை புரிவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், காதலும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வார இறுதியில் பயணங்களை திட்டமிடலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வார தொடக்கத்தில் வேலைகள் அனைத்தும் வேகமாக நடக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். இந்த வாரம் புத்திசாலித்தனமாக முதலீடுகளை செய்ய வேண்டும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபட்டால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கலாம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த வாரம் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியமானது வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வார தொடக்கத்தில் உங்களின் முடிவெடுக்கும் திறன் வலுவாக இருக்கும். பணியிடத்தில் கடின உழைப்பும், தலைமைத்துவ திறனும் பாராட்டப்படும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்பத்தின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப சூழல் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் சாதகமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மேலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஊக்கமளிக்கும் வாரமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு நல்ல பலனைத் தரும். மேலும் இந்த வாரம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆனால் ஓய்வில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications