வார ராசிபலன் (16 November 2025 To 23 November 2025)- இந்த வாரம் இந்த ராசிக்கு மோசமா இருக்கும்.. உஷார்..

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 நவம்பர் 16 ஆம் தேதி முதல் 2025 நவம்பர் 23 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 16 November 2025 To 23 November 2025 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் சோர்வு அல்லது தூக்கமின்மை தொந்தரவு செய்யலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் நிலைத்தன்மையைப் பராமரிக்க வேண்டும். முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். கூட்டு தொழில் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் வரும். இருப்பினும் புத்திசாலித்தனமாக செலவழிக்க வேண்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் முக்கியமான முடிவெடுக்கும் வாரமாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். வார இறுதியில் பயணம் செய்ய நேரிடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் நிறைந்திருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணப் பிரச்சனைகள் தீரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். எந்த முடிவை எடுக்கும் முன்பும் கவனமாக சிந்திக்க வேண்டும். தொழிலதிபர்களுக்கு புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தினருடனான உறவுகள் சுமூகமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வார இறுதியில் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் திட்டங்களை செயல்படுத்த சிறந்த காலமாக இருக்கும். வேலையில் நல்ல வெற்றியும், மரியாதையும் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் உற்சாகமும் நம்பிக்கையும் நிறைந்திருக்கும். வேலையில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். தொழிலில் புதிய திட்டங்கள் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். கடன்களை அடைக்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். ஆரோக்கியம் சாதகமாக இருக்கும். இருப்பினும் தூக்கம் மிகவும் அவசியம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையில் சவால்களை அதிகம் எதிர்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை பேச்சின் மூலம் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் நம்பிக்கையை பேணுங்கள். சிறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆனால் அதை அசால்ட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலைமை வலுவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். வார இறுதியில் பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலையில் வெற்றிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முதலீடுகளில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் எச்சரிக்கையாகவும், விவேகத்துடனும் செயல்பட வேண்டும். வேலையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். பொறுமையாக இருந்தால், எதையும் சமாளிக்கலாம். நிதி விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். குடும்பத்தின் முழு ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு உற்சாகமும், வெற்றியும் நிறைந்ததாக இருக்கும். வேலையில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். நிதி நிலைமை வலுவடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, November 15, 2025, 20:31 [IST]
Desktop Bottom Promotion