வார ராசிபலன் (05 October 2025-11 October 2025)- இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் பண கஷ்டம் தீரப்போகுது..

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 அக்டோபர் 05 ஆம் தேதி முதல் 2025 அக்டோபர் 11 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 05 October 2025 To 11 October 2025 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனை கண்டு மகிழ்வார்கள். வேலை மாற்ற நினைத்தால், இந்த வாரம் சாதகமாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். இருப்பினும் செலவுகள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கலாம். பணிபுரிபவர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை பரபரப்பாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். ஆயினும் இந்த வாரம் உங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். காதல் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வேலையைப் பொறுத்தவரை, கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக செரிமான பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தொழிலதிபர்கள் இந்த வாரத்தில் செய்யும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் திட்டங்களை செயல்படுத்தினால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இந்த வாரத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கடன் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், பேசும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. காதல் விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் தன்னம்பிக்கையால் நிறைந்திருப்பீர்கள். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனை வெளிக்காட்டி பாராட்டைப் பெறுவீர்கள். புதிய திட்டங்களில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையில் தடைகளை சந்திக்கலாம். செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே உங்கள் பட்ஜெட்டில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் இருந்த தவறான புரிதல்கள் தீரும். உறவுகள் வலுவடையும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் பொறுமை சோதிக்கப்படும். வேலையில் சவால்களை எதிர்கொள்வீர்கள். இருந்தாலும், கடின உழைப்புக்கான பலனும் கிடைக்கும். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தொழிலதிபர்கள் கூட்டு தொழில் செய்தால், சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் பொறுமையைப் பேண வேண்டும். ஆனால் வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றியைத் தரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, October 4, 2025, 22:49 [IST]
Desktop Bottom Promotion