Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
வார ராசிபலன் (03 November 2024-09 November 2024)- இந்த வாரம் இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 நவம்பர் 03 ஆம் தேதி முதல் 2024 நவம்பர் 09 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியம் மற்றும் உறவுகளில் கூடுதல் கவனத்தை செலத்த வேண்டும். வார தொடக்கத்தில் ஒருவருடன் ஏற்படும் சண்டையானது மிகுந்த கவலையடைய வைக்கும். பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமான வாரமாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்தும் திட்டம் இருந்தால், சிறப்பு நபரின் உதவியுடன் செய்வீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வாழ்வில் குழப்பங்கள் ஏற்படலாம். இந்த வாரத்தில் உங்கள் வேலைகளை முடிக்க அதிகம் சுற்ற வேண்டியிருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்காமல் வருத்தப்படுவீர்கள். பிள்ளைகள் தொடர்பான கவலைகளும் அதிகரிக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் திடீரென ஏற்படும் சில பெரிய செலவுகள் காரணமாக உங்களின் பட்ஜெட் பாழாகும். வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் சிக்கிய பணத்தை திரும்ப பெற சிரமப்பட வேண்டியிருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திட்டங்கள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிவடையும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வணிகம் தொடர்பாக நீண்ட அல்லது குறுகிய பயணங்களை மேற்கொள்ளலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. இந்த பயணம் இனிமையாகவும் லாபகரமாகவும் அமையும். இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும், எந்தவொரு திட்டத்திலும் பணத்தை முதலீடு செய்யும்போது, அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அவசரத்தைத் தவிர்த்து, உங்கள் எல்லா வேலைகளையும் மிகுந்த கவனத்துடனும் புரிதலுடனும் செய்ய வேண்டும். வாரத்தின் மத்தியில் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையாக இருக்கும். இந்த வாரத்தில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம். இந்த வாரம் நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அதை சிறந்த முறையில் செய்ய முயற்சி செய்யுங்கள். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்க எந்தவொரு பெரிய விஷயத்தையும் அல்லது முடிவையும் எடுக்கும்போது, உங்கள் நலம் விரும்பிகளின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் குறித்த நேரத்தில் முடிவடையும். வாரத்தின் ஆரம்பம் நிதி ரீதியாக மிகவும் சாதகமாக இருக்கும். குடும்பம் தொடர்பான எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்கும்போது, உங்கள் சகோதர சகோதரிகளின் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பல ஆதாரங்களில் இருந்து நன்மைகளைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் மகிழ்ச்சியாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகமாக இருக்கும். இதன் மூலம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் வெற்றியையும் லாபத்தையும் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் இலக்கை அடைந்து வெற்றி பெறுவார்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களையும் பெறுவார்கள். வாரத்தின் நடுப்பகுதியில் குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று மோசமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு அதிஷ்டமானதாக இருக்கும். தோழியின் உதவியால் ஒரு பெரிய பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வேலையைப் பெறலாம். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வேலையை மாற்ற விரும்பினால், உங்கள் விருப்பம் நிறைவேறலாம். இந்த வாரத்தில் நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். இந்த வாரம் மற்றவர்களுடன் இனிமையான நடத்தையைப் பேண வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் நெருங்கியவர்கள் உங்களை விட்டு வெளியேறலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு பிடித்த மற்றும் உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் நடப்பதைக் காணலாம். நீங்கள் எதிர்பார்க்காத சில மாற்றங்களையும் காணலாம். இந்த வாரத்தில் நீஙகள் சோம்பலை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை முடிக்க கூடுதல் நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். மாணவர்கள் விரும்பிய வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் அவசரமாக வேலைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பருவகால மாற்றங்களால் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படலாம். கூட்டுதொழில் செய்பவர்கள், தங்கள் கூட்டாளரை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் மிகவம் கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சிகள் காரணமாகவோ, புரிதல் இல்லாமலோ எந்த வேலையையும் செய்யக்கூடாது. இந்த வாரத்தில் எதிரிகள் மட்டுமின்றி, உங்கள் ஆரோக்கியத்தாலும் வேலைகள் கெட்டுப்போகும். பணத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும் மற்றும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் எந்தவொரு திட்டத்திலும் அல்லது வணிகத்திலும் பணத்தை முதலீடு செய்யும் போது அனுபவசாலிகளின் கருத்தைப் பெற வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











