Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
Weekly Health Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்கள் கோபத்தைக் குறைத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது...
Weekly Health Horoscope: ஒருவரது ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கமானது அவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், கிரக நிலை அமைப்பின் விளைவு அவரவர் ஆரோக்கியத்தில் கண்கூடாக தெரியும். அந்த வகையில் ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டு இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்...
ஜூலை 01ம் தேதி முதல் ஜூலை 07ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும், நீங்கள் நோயிலிருந்து விடுபடுவீர்களா அல்லது உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமா என்றெல்லாம் இப்போது பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, அதிகரிக்கும் பணிச்சுமையால் இந்த வாரம் நீங்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். அதனால், உங்கள் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்த உங்களுக்கு நேரம் கிடைக்காது. இது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் எரிச்சலாக உணரலாம். நீங்கள் தினமும் யோகா மற்றும் தியானம் செய்வது நல்லது. மேலும், உங்கள் எல்லா வேலைகளையும் திட்டமிட்டபடி முடிக்க முயற்சிக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீங்கள் மிகவும் நேர்மறையாக உணருவீர்கள். உங்கள் ஆற்றல் மட்டமும் உயரும். உங்கள் வேலைகள் அனைத்தையும் விரைவாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் நீண்ட காலமாக உங்கள் உடல்நலப் பரிசோதனை செய்யவில்லை என்றால், இந்த நேரத்தில் கண்டிப்பாக மருத்துவரை அணுகி முழு உடற்பரிசோதனை செய்து கொள்ளவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையான பலன்களைத் தரும். வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு நன்றாக இருக்காது. ஆனால் அதற்குப் பிறகு வரும் நாட்கள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். உங்கள் வேலையுடன் உங்கள் ஆரோக்கியத்திலும் சமமான கவனம் செலுத்தினால், விரைவில் நீங்கள் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்கள் மீது கவனம் செலுத்த உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். அதனால், உங்கள் ஆரோக்கியம் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்கள் உணவு பழக்கங்களில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்யலாம். நீங்கள் உடற்பயிற்சி கூடம் போன்றவற்றில் சேர விரும்பினால் இந்த காலக்கட்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இந்த வாரம் பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகமாக இருக்கும். அதனால், நீங்கள் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணருவீர்கள். மன ஆரோக்கியமும் மோசமடையலாம். நீங்கள் சிறிய விஷயங்களுக்கு கோபப்படுவதோடு, மிகவும் எரிச்சலாக உணருவீர்கள். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் எந்த வகையில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். இல்லையெனில், பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இந்த நேரத்தில் நீங்கள் கனமான பொருட்கள் எதையும் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர, உங்களுக்கு நரம்புகள் மற்றும் தசைகள் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம். எந்த ஒரு வேலையையும் அவசரப்பட்டு பீதியில் செய்யாதீர்கள். இல்லையெனில், உங்களுக்கு காயம் ஏற்படக்கூடும். எதையும் நிதானமாக செய்வது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இந்த காலக்கட்டத்தில் எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதோடு, உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் சோர்வாக உணருவீர்கள். உணவு கோளாறுகள் காரணமாக உங்கள் உடல் பலவீனம் அதிகரிக்கலாம். எனவே, எத்தகைய சூழலிலும் உங்கள் ஆரோக்கியத்துடன் விளையாடாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு சிறிய உடல்நலப் பிரச்சனைகள் இருந்தாலும், அதைப் புறக்கணிப்பது உங்களுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தலாம். மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நல்லது. உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதோடு புத்துணர்ச்சியாகவும் உணர்வீர்கள். உங்கள் நேர்மறை ஆற்றம் மற்றும் தன்னம்பிக்கை உங்களுக்கு பெரிய வெற்றியைத் தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே, ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். ஒரு சிறு முயற்சி மற்றும் மாற்றத்தால், உங்கள் ஆரோக்கியம் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்கள் மன அமைதியைப் பராமரிக்க, தினமும் தியானத்தைச் சேர்த்து கொள்ளுங்கள். யோகா செய்வதும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, வானிலையில் ஏற்படும் மாற்றங்களால் உங்களுக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க, நீங்கள் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே, ஆரோக்கியத்தில் நீங்கள் கவனக்குறைவாக இருப்பது, உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும். இக்காலத்தில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு தொடர்ந்து தலை வலி பிரச்சனை இருந்தால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நீங்கள் மன அழுத்தத்தையும் கோபத்தையும் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications