Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
ஜூன் மாதத்தில் 2 முறை நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசித்து செல்வம் பெருகும்..
Venus Transit Will Occur Twice In June 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். பொதுவாக சுக்கிரன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் பயணிப்பார். அதே சமயம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
இவ்வாறு சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் ஜூன் மாதத்தில் சுக்கிரன் இரண்டு முறை தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளார். அதுவும் இரண்டு முறை நட்சத்திரத்தை மாற்றவுள்ளார்.

அதில் முதலாவதாக சுக்கிரன் ஜூன் 13 ஆம் தேதி பரணி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதன் பின் ஜூன் 26 ஆம் தேதி சுக்கிரன் கிருத்திகை நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இப்படி நட்சத்திர பெயர்ச்சிகளின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெற்று, நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
ஜூன் மாதத்தில் 2 முறை நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால், மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் பிணைப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நேரத்தைச் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வணிகர்களுக்கு சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இன்னும் சிறப்பான பலனைப் பெற இந்த ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை வணங்குவது வாழ்க்கையில் செழிப்பைக் கொண்டு வரும்.
சிம்மம்
ஜூன் மாதத்தில் 2 முறை நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை வலுபெறும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.
விருச்சிகம்
ஜூன் மாதத்தில் 2 முறை நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். காதல் உறவு இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். வேலை தேடுபவர்களுகு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலையை மாற்றும் வாய்ப்பு கிடைக்கும். அதைப் பயன்படுத்திக் கொண்டால் உயர் நிலையை அடையலாம். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலை வலுவடையும். சுக்கிரனின் அருளால், அழகு, செல்வம் மற்றும் மகிழ்ச்சி வாழ்க்கையில் பெருகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
