சுக்கிரன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம்

ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இவ்வாறு கிரகங்கள் தொடர்ந்து நகரும் போது அவை சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைகின்றன. இந்த கிரக இணைப்புகள் சிலசமயங்களில் நேர்மறையான விளைவுகளையும், சில சமயங்களில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

Venus Transit in Thiruvathirai Nakshatra Bring Financial Challenges To These Zodiac Signs

மே 20 ஆம் தேதியான இன்று சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிரவேசித்தார். இந்த காலகட்டத்தில் நிகழும் இந்த கிரக மாற்றம், ஜோதிடரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சுக்கிரன் மே 28 வரை அதே நட்சத்திரத்திலேயே நிலைத்திருப்பார், அதன் பிறகு புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் பிரவேசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோதிடத்தில் உள்ள, 27 நட்சத்திரங்களில் திருவாதிரை ஆறாவது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் ராகு மற்றும் ருத்ரப் பெருமானுடன் தொடர்புடையதாகும்.

ஜோதிட சாஸ்திரத்தில், சுக்கிரன் காதல், ஆடம்பரம், உறவுகள் மற்றும் அழகு ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அதேசமயம் திருவாதிரை நட்சத்திரமானது, குழப்பம், சிக்கல்கள் மற்றும் கணிக்க முடியாத தன்மைகளுடன் பெரும்பாலும் தொடர்புபடுத்தப்படும் கிரகமான ராகுவால் ஆளப்படுவதாகும். இந்தக் கிரகச் சேர்க்கையானது, வரும் நாட்களில் சில ராசிகளுக்கு சாதகமற்ற நிலையை உருவாக்கக்கூடும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள்ள் இந்தக் காலகட்டத்தில் பணியிடத்தில் சவால்களை எதிர்கொள்ளக்கூடும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் நல்லுறவைப் பேணுவது மிகவும் முக்கியமானதாக இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும், கோபத்தைக் கட்டுப்படுத்துவதும் தொழில் வளர்ச்சியைப் ஊக்குவிக்கும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த காலகட்டத்தில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். அவர்கள் நினைத்த விஷயங்கள் எதுவும் இப்போதும் சாதகமாக முடிவடையாது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டம் நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் வழக்கத்தை விட அதிக மன அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும். வேலையில் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை அடைவதில் ஏற்படும் தாமதங்கள், விரக்தி மற்றும் அழுத்தத்திற்கு வழிவகுக்கும். காதல் உறவுகளில் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே வெளிப்படையான உரையாடல் அவசியமானதாகும். அவசரமான நிதி முடிவுகளைத் தவிர்ப்பதும், முதலீடுகளைச் செய்வதற்கு முன்பு அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை பெறுவதும் நல்லது.

அவர்களின் தவறான முடிவுகளால் சமூகத்தில் அந்தஸ்தையும், மதிப்பையும் இழக்க நேரிடும். வாகனங்களை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும், நீண்ட தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு இந்த கிரக மாற்றம் ஏற்றதல்ல, புதிய வியாபாரம் தொடங்குவதற்கு இது சாதகமான நேரமல்ல. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும், இது உங்கள் சேமிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் போட்டி அதிகரிக்கக்கூடும், சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகளும் எழலாம். பழைய தகராறுகளும் மீண்டும் தலைதூக்கக்கூடும் என்பதால், பொறுமை மிகவும் அவசியமாகும். இந்த காலகட்டத்தில் அவர்கள்முதலீடுகள் மற்றும் பணம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில அவமானங்களையும், வெறுமையையும் அவர்கள் சந்திக்க நேரிடும். அவர்கள் துணையுடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, மேலும் அவர்கள் துணையுடன் சீரான உறவைப் பராமரிக்க வேண்டும்.

தொழில் வாழ்க்கையிலும் அவர்கள் மன அழுத்தத்தை உணரலாம், மேலும் அவர்களின் வணிக கூட்டாளருடன் சில வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் துணையின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிக முக்கியம். மருத்துவமனைக்காக பெரிய தொகையை செலவிடும் நிலை ஏற்படலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, May 20, 2026, 19:44 [IST]
Desktop Bottom Promotion