Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரன்: ஆகஸ்ட் 01 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
Venus Transit In Thiruvaathirai Nakshatra On 01 August 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 1 மாத காலம் பயணிப்பார் மற்றும் இவர் அழகு, காதல், ஆடம்பரம், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். அதோடு சுக்கிரன் குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் சுக்கிரன் ஜூலை 26 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 01 ஆம் தேதி சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு.

இந்த ராகுவின் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதுவும் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக திடீர் நிதி ஆதாயங்களும், வெற்றிகளும் குவியப் போகிறது. இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஒவ்வொரு வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல ஆதாயங்களைத் தரும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் புதிய வருமானத்தையும், பதவி உயர்வையும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஆளுமை மேம்படும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் செய்து வந்தால், நல்ல லாபம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வரும். வாழ்க்கையில் புதிய சாதனைகளைப் புரிவீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். முக்கியமாக பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
