Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
விருச்சிகம் செல்லும் சுக்கிரன்: அக்டோபர் 13 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப்போகுது...
Venus Transit In Scorpio On 13 October 2024: நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு, செல்வம், ஈர்ப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரனின் நிலை ஒருவரது ஜாதகத்தில் சிறப்பாக இருந்தால் தான், அந்நபர் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். இல்லாவிட்டால் அந்நபர் வாழ்வில் நிறைய பண பிரச்சனைகளை சந்திப்பார்.
இப்படிப்பட்ட சுக்கிரன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார். அந்த வகையில் தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 13 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். விருச்சிக ராசியானது செவ்வாயின் ராசியாகும்.

இந்த ராசியில் சுக்கிரன் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கப் போகிறது. அதாவது, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. இப்போது சுக்கிர பெயர்ச்சியால் நிதி ரீதியாக நல்ல பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வேலையில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். மேலும் இக்காலத்தில் எதிர்பாராத சில நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தாயுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலதிபர்கள் முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications