Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களின் காட்டுல பணமழை கொட்டப்போகுது..
Venus Transit In Poorattathi Nakshatra On 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், அழகு, கலை, செல்வம், இன்பம், வசதி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் அவ்வப்போது ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். அதோடு ஏப்ரல் 01 ஆம் தேதி சுக்கிரன் எதிரி கிரகமான குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த பூரட்டாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை இருப்பார். பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருப்பதோடு, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது.

ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் 25 ஆவது நட்சத்திரம் தான் பூரட்டாதி. இந்த நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். இந்த பூரட்டாதி நட்சத்திரமானது சனி பகவானின் கும்ப ராசியில் உள்ளது. இப்போது பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக நீண்ட நாள் ஆசைகளை நிறைவேறும். எந்த ஒரு வேலைக்காகவும் கடன் வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும்.
தொழில் ரீதியாக, பல புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். மேலும் தலைமைத்துவ திறன்களும் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் மகத்தான பலன்களைப் பெறுவார்கள். அறிவாற்றல் மேம்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக, நிறைய நன்மைகளைப் பெறக்கூடும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்பாக மாறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
தொழில் ரீதியாக நல்ல நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தலைமைத்துவ பண்புகள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications