Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
2025-ல் நடக்கும் முதல் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது...
Venus Transit In Pisces 2025: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களில் சுக்கிரன் 26 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அவ்வாறு சுக்கிரன் ராசியை மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டில் நுழைவுள்ளோம். இந்த புத்தாண்டில் நுழையும் போது சுக்கிரன் கும்ப ராசியில் பயணித்து வருவார். மேலும் 2025 ஜனவரியில் சுக்கிரன் குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் நுழையவுள்ளார். அதுவும் இந்த பெயர்ச்சியானது 28 ஜனவரி 2025 அன்று நிகழவுள்ளது.

2025 ஆம் ஆண்டில் நடக்கும் இந்த முதல் சுக்கிர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். முக்கியமாக நிதி நிலையில் நல்ல உயர்வைக் காணப் போகிறார்கள். இப்போது 2025-ல் நடக்கும் முதல் சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சுக்கிரனின் ஆசியால் ஆளுமை மேம்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வசதிகள் பெருகும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகள் குவியும். தொழில் ரீதியாக வாழ்க்கை செழிப்பாக இருக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும் திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிறைய நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. ஆக்கப்பூர்வமான சிந்தனை வாழ்க்கையில் நிறைய நன்மைகளைத் தரும். வெளிநாட்டில் பணிபுரிய வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் தேடி வரும். மொத்தத்தில் சுக்கிரனின் ஆசியால் பலவிதமான நன்மைகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
